Gold Price Today: ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. காலையில் உச்சம்! பிற்பகலில் சரிவு.. சென்னையில் ரேட் எவ்வளவு?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூபாய் 2 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. தீபாவளி தினமான நேற்றும், சனிக்கிழமையும் விலை சரிந்த நிலையில், இன்று தடாலடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், பிற்பகலில் ஆறுதல் அளிக்கும் விதமாக விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று மாலையில் சவரனுக்கு ரூ.1440 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை சென்னையில் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ. 40 ஆயிரம் உயர்ந்து அதிர வைத்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை சுமார் ₹57 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது விலை ஒரு லட்சத்தை நெருங்கி செல்கிறது.
ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை செல்வது நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. இந்த மாதத்திலும் தங்கம் விலையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த 17-ம் தேதி கிராம் ரூ. 12,200-க்கும், சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை ஆனது. முதல் முறையாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை மறுநாள் அதாவது 18 ஆம் தேதி குறைந்து கிராம் ரூ. 12 ஆயிரத்துக்கும், சவரன் ரூ. 96 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து விலை சரியுமா?
ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை ஆனது. தீபாவளி நாளான நேற்றும் ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை கிராம் 80 ரூபாய் குறைந்து ரூ. 11,920-க்கும், சவரன் ரூ. 640 குறைந்து ரூ.95,360-க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சரியுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
தற்போதைய தங்கம் விலை என்ன?
இந்த நிலையில், விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இன்று கிராம் 260 ரூபாய் உயர்ந்து ரூ. 12,180-க்கும், சவரன் ரூ. 2,080 அதிகரித்து ரூ. 97,440-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை மறுபடியும் கிராம் ரூ. 12 ஆயிரத்தையும், சவரன் ரூ. 97 ஆயிரத்தையும் தாண்டியது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
இந்த நிலையில் இன்று மாலையில் தங்கம் விலை சரிந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.2080 கூடிய நிலையில் மாலையில் ரூ.1440 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் விலை இன்று சென்னையில் ரூ.96,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் காலையில் ரூ.260 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.180 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications