Gold Price Today: இனிமே குறையவே குறையாது போல! ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை.. 4 நாட்களில் 5 ஆயிரம் எகிறியது
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) மீண்டும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று மதியம் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை இன்று அதை விட அதிகமாக ரூ.2,280 உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.1.07 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ. 5,240 அதிகரித்துள்ளது.
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை நவம்பர் 2 ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. நேற்றும் சரமாரியாக உயர்ந்துள்ளது. நேற்று காலையில் 200 ரூபாய் மட்டும் அதிகரித்த நிலையில், அமெரிக்க தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஷாக் கொடுத்தது. இதனால் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கம் விலை இனி மீண்டும் உச்சத்தை நோக்கி பறக்கும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் டாலர் மதிப்பு சரிந்துள்ளதாலும், அங்குள்ள பத்திரப்பதிவு வருவாய் குறைந்ததாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியது தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனால் அடுத்த சில நாட்கள் தங்கம் விலை உயரவே வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை
தங்கம் விலை எப்போது தான் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு சவரன் ரூ.1.02 லட்சத்தை தொட்டது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சம் தொட்ட நிலையில், தற்போது தான் ரூ.1 லட்சத்தை நெருங்கி தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் பலரும் இப்போது நகை வாங்கினால் சரியாக இருக்கும் என நகை வாங்க திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் கடந்த திங்கட்கிழமையில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது. தொடர்ச்சியாக 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று தாறுமாறாக உயர்ந்தது. காலையில் சவரனுக்கு ரூ.200 மட்டும் உயர்ந்து இருந்த நிலையில் மதியம் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது. அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது.
இன்றும் ராக்கெட் வேகம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் டிரம்பின் குடியரசுக் கட்சி இழந்ததால் நேற்று மதிய நேரத்திலேயே தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. நம் ஊர் சந்தையிலும் தங்கம் விலை நேற்று மதியம் மட்டும் சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து நகை பிரியர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்தது. இதனால் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.
இது நேற்றோடு முடியும் என்றும் சொல்ல முடியாது எனவும், அடுத்த சில நாட்களுக்கு தங்கத்தில் விலை ஏறத்தான் செய்யும் எனவும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை இன்று கூடும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.275 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய ரேட் என்ன?
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.2,280 அதிகரித்து 1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.285 அதிகரித்து ரூ.13,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,240 அதிகரித்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் நேற்று மதியம் கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி நேற்று ஒரே நாளில் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
5-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,080 (இன்று)
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,800 (நேற்று மதியம்)
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600 (நேற்று காலை)
3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400
2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200
1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080
1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.





Click it and Unblock the Notifications
