Gold Price Today: மீண்டும் வேகமெடுக்கும் தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஷாக்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. தொடர்ந்து சரிந்த வந்த தங்கம் தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றும் தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்து அதிர்ச்சியளித்துள்ளது.
தங்கம் எல்லாம் இனி வாங்க முடியுமா? என சாமானிய மக்கள் நினைக்கும் அளவிற்கு அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சம் இன்னும் சில ஆண்டுகள் கழித்தே எட்டும் என நினைத்த மக்களுக்கு நடப்பு ஆண்டிலேயே எட்டி அதிர்ச்சி கொடுத்தது தங்கம் விலை.

உச்சம் தொட்ட தங்கம் விலை
தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. இனி கிராமுக்கு ஒரு லட்சம் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என நினைக்கும் அளவிற்கு விலையேற்றம் இருந்து வருகிறது சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டிரம்பின் பொருளாதார கொள்கைகள், உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழல் உள்ளிட்டவற்றால் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சர்வதேச சந்தையில் நேற்றிரவு தங்கம் விலை கணிசமான சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தை புக் செய்யத் தங்கத்தை விற்றதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்தது. இதனால் இந்தியாவில் மிகக் குறைவாகவே தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.240 உயர்ந்து ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்தது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.320 அதிகரித்து ரூ.1,19,440-க்கு விற்பனை ஆகின்றது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.14,930-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல உயர்ந்து வந்த வெள்ளி விலை நேற்று குறைந்து சர்ப்ரைஸ் தந்தது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.10 குறைந்து இருந்தது. ஆனால் இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்
25.02.2026 - ஒரு சவன் ரூ.1,19,440 (இன்று)
24.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,120 (நேற்று)
23.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,880
22.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
21.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,440
20.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000
18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
-
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Rate: இந்த சன்டே மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா..! தங்கம் விலை இன்னும் குறைஞ்சிருக்குமே! -
Gold Rate: தங்கம் விலையில் பெரும் சரிவோ சரிவு! 1 லட்சத்திற்கு கீழ் ரேட் குறையுமா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications