தங்கம் விலை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்வு.. வெறும் 3 நாளில் 13000 உயர்ந்த வெள்ளி.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,360 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கு விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம், பிற்பகல் நிலவரப்படி, மேலும் கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், பவுனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்தது. இன்று தங்கம் விலை வரலாற்றிலேயே இல்லாத ஒன்றாக ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்து, 102,160 ரூபாய்க்கு சென்னையில் விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் வரை 96 ஆயிரம் என்கிற நிலையில் இருந்தது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 15-ந்தேதி பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனையானது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு பவுன் ரூ.1 லட்சம் என்ற இமாலய உச்சத்தையும் அண்மையில் எட்டியது. மேலும் விலை அதிகரிக்க போகிறது என்று மக்கள் அச்சப்பட்ட நிலைய்ல, அடுத்த நாளே விலை 'மளமள'வென சரிந்தது. பின்னர் மீண்டும் கொஞ்சம், கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

Gold prices have risen to an unprecedented level silver prices increased by 3 000 in just 3 days

இப்படியாக விலை உயர்ந்து கொண்டே சென்றது. நேற்று ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் டிசம்பர் 22ம் தேதியான நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது. பின்னர் மாலையில், மேலும் கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.170-ம், பவுனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கும் சென்னையில் விற்பனை ஆனது. ஏற்கனவே தங்கம் விலை கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1,00,120-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது அந்த விலையையும் மிஞ்சி, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. தற்போது பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காண காரணம் என்கிறார்கள் நகை வியாபாரிகள். நகையின் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொடுவதால், வங்கிகளின் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் நம்ப முடியாத வேகத்தில் அதிகரித்துள்ளது. தங்க நகைக்கடன் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இது வங்கிகளே எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது.

தங்கம் ஒருபுறம் ஏறுகிறது என்று பார்த்தால், வெள்ளி விலை உயர்வு யாரும் எதிர்பாராத புதிய உச்சமாக இருக்கிறது. , தினமும் 5000, 4000 என்று ஏறுகிறது. அப்படித்தான் நேற்றும் அதன் விலை உயர்ந்து இருந்தது. நேற்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை வரலாற்றில் இல்லாத வகையில் உயர்ந்து நிற்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து 12,770க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் 1600 ரூபாய் உயர்ந்து 102,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 234 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 3000 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து 234,000க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை வெறும் 3 நாளில் கிலோவிற்கு 13000 என்கிற அளவில் உயர்ந்துள்ளது. தங்கம் விலை வெறும் இரண்டு நாளில் சுமார் 3000 வரை உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை இப்படி அதிகப்படியாக உயர்ந்திருப்பது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+