படக்கென எழுந்த அமெரிக்கா.. விருட்டென அதிகரித்த வேலைவாய்ப்புகள்! தங்கம் விலை இனி தாறுமாறாக உயரும்?
சென்னை: அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் வலுவாக இருந்தபோதிலும், உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தையே நம்பி இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொதுவாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகும் நேரத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருப்பது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது அமெரிக்க வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட தொடங்கியுள்ளது.
புதன்கிழமை அமெரிக்காவில் வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தன. அதாவது, கடந்த மாதம் 42,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக ADP நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இது உலக அளவில் பிரபலமான ராய்ட்டர்ஸ் நிறுவனம் கணித்த 28,000 என்ற வேலை வாய்ப்பு எண்ணிக்கையை விட குறிப்பிடத்தக்க உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக, வேலைவாய்ப்பு வளர்ச்சியடைந்தால் பொருளாதாரம் வலுவாக உள்ளது என பொருள்படும். அதனால் வட்டி விகிதக் குறைப்புகள் தாமதமாகும்.

தங்கம் விலை உயர்வு
இதனால் தங்கம் போன்ற வட்டி வருமானம் தராத முதலீடுகளின் விலை குறைவதே வழக்கம். ஆனால், இந்த முறை அதற்கு மாறாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை அமெரிக்க ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்சுக்கு 1.3% உயர்ந்து $3,983.89 என்ற அளவில் இருந்தது. டிசம்பர் மாதத்திற்கான தங்க வர்த்தக விலை $3,992.90 ஆக உயர்ந்தது. வெள்ளி, பிளாட்டினம், பாலடியம் போன்ற பிற மதிப்புமிக்க உலோகங்களின் விலையும் இதனுடன் சேர்ந்து உயர்ந்துள்ளன. வெள்ளி 2.2%, பிளாட்டினம் 1.7%, பாலடியம் 2.4% அளவுக்கு உயர்வை கண்டன.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவு
இதற்கு முக்கிய காரணம், பங்குச் சந்தைகள் கடந்த சில நாட்களாக மிக அதிக மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டு வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். "உலக பங்குச் சந்தைகள் தற்போது சிறிதளவு அதிர்வுடன் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்க பங்குகள் அதிக மதிப்பில் உள்ளன என்ற கருத்தும், 'ஏஐ பங்குகள்' குறித்து உருவாகியிருக்கும் பபுள் பற்றிய அச்சமும் முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டை நோக்கி தள்ளியுள்ளது என கிட்கோ மெட்டல்ஸ் நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளர் ஜிம் வைக்ஃகாஃப் கூறுகிறார்.
அமெரிக்க மத்திய வங்கி
மேலும், அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) சமீபத்தில் வட்டி விகிதத்தை குறைத்தது. ஆனால் அதன் தலைவர் ஜெரோம் பவல், இது இந்த ஆண்டிற்கான கடைசி வட்டி குறைப்பாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதனால், டிசம்பர் மாதத்தில் மீண்டும் வட்டி குறைப்புக்கான வாய்ப்பு கடந்த வாரம் 90 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 63 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கம் விலை இனி குறைய வாய்ப்பில்லை என என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
தங்கம் மதிப்பு உயர்வு
பொதுவாகவே, அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் மற்றும் தங்கத்தின் விலை இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. வேலைவாய்ப்புத் தரவுகள் பலவீனமாக வந்தால் முதலீட்டாளர்கள் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைப் பற்றி அச்சமடைந்து தங்கத்தை நோக்கி நகர்வார்கள். இதனால் தங்கத்தின் விலை உயரும். மாறாக, வேலைவாய்ப்புத் தரவுகள் வலுவாக வந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என கருதி முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை போன்ற அபாயமுள்ள முதலீடுகளுக்கு திரும்புவார்கள். இதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பும் உண்டு.
பாதுகாப்பான முதலீடு
அதனால், தங்கத்தில் முதலீடு செய்யும் முன், அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளை கவனமாகப் பார்த்து அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வது முக்கியம். "அமெரிக்கா வேலைவாய்ப்பு - தங்கம்" என்ற பகுப்பாய்வு சொற்றொடர் முதலீட்டு உலகில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது தங்கத்தின் விலை மாற்றத்தையும் பொருளாதாரத்தின் நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications