Gold Rate Today: ஒரே நாளில் இரு முறை உயர்ந்த தங்கம் விலை! சவரன் 93 ஆயிரத்தை நெருங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 13) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 92,200-க்கும் ஒரு கிராம் ரூ 11,525-க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 195-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,97,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ 92,640-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 640 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.

அக்டோபர் 13 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 92,200-க்கும் கிராமுக்கு ரூ 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,525-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ 92640-க்கும் கிராமுக்கு ரூ 55 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 11,580-க்கு விற்பனையாகிறது. அதுபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 195-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,97,000-க்கும் விற்பனையாகிறது.

அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது. எனவே தீபாவளிக்கு சவரன் 90 முதல் 95 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)

13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)

12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000

11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)

11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)

10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)

09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)

08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)

07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)

06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)

05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600

03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)

02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)

01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+