Gold Rate Today: காலையில் சரிந்த தங்கம்! மாலையில் விர்ர்..! மார்க்கெட் திறந்ததும் என்ன ஆகுமோ?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 18) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 2000 குறைந்து ஒரு சவரன் ரூ 95,600-க்கு விற்பனையான நிலையில் மாலையில் ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை உயராமல் ஒரு கிராம் ரூ 190 க்கு விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகைக்கு தங்கம் விலை 1 லட்சத்திற்கு விற்பனையாகும் என சொல்லப்பட்ட நிலையில் விலை குறைவது போல் குறைந்து உயர்ந்ததால் மக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன.

இதை முன் வைத்து ரஷ்யாவில், டாலருக்கு பதிலாக ஜோலதோ என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளனர். இதனால் விரைவில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ 1 லட்சத்தை எட்டும் என்கிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.
அக்டோபர் 18-ஆம் தேதியான இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்து ஒரு சவரன் ரூ 95,600-க்கும் கிராமுக்கு ரூ 250 குறைந்து ஒரு கிராம் ரூ 11,950-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 96 ஆயிரத்திற்கும் கிராமுக்கு ரூ 50 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை காலையில் கிராமுக்கு ரூ 13 குறைந்து ஒரு கிராம் ரூ 190-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,90,000-க்கும் விற்பனையான நிலையில் மாலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது. எனவே தீபாவளிக்கு சவரன் 90 முதல் 95 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
19.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000 (மாலை)
18.10.2025 - ஒரு சவரன் ரூ.95,600 (காலை)
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)












Click it and Unblock the Notifications