மீனாட்சி கிட்ட சிக்கிய நிஷாந்த்.. காதலிக்காக செம ரிஸ்க்.. அந்தம்மா சொன்னதை கேட்டீங்களா.. அந்தணன் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை தனிஷக் நகைக்கடை கொள்ளையடித்த நகைகளை கொண்டுவந்து மீனாட்சியிடம் கொடுக்கும்போது, அந்த பெண்ணாவது, "நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒரு விஷயத்தை சொல்லிவிட்டேன். அதற்காக இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு வந்துவிட்டாயே?" என்று கேட்டிருக்க வேண்டாமா? ஆனால், அவர் அந்த நகைகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். "தைரியமாக இரு" என்று அந்தத் தாய் சொல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை" என்று கருத்து கூறியிருக்கிறார் மூத்த சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன்.

Meenakshi Nishanth Madurai Jewellery Robbery Valaipechu Anthanan

நிஷாந்த் - மீனாட்சி

Valai pechu Anthanan சேனலில் அந்தணன் பேசும்போது, "பாப்பா, தைரியமாக இரு" என்று போலீஸ் வேனில் ஏறும் மகளிடம் ஒரு தாய் சொல்கிறார். ஒரு பெண் தேர்வு எழுதச் செல்லும்போதோ, திருமணமாகி புகுந்த வீட்டுக்குச் செல்லும்போதோ, ஒரு தாய் இப்படிச் சொன்னால் கொண்டாடலாம். ஆனால், கொள்ளை வழக்கில் சிக்கி போலீஸ் வேனில் ஏறும்போது இப்படிச் சொல்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 15 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மீனாட்சி நாச்சியார் சிக்கியிருக்கிறார். அவருடைய வீடியோக்களை முன்பு பார்த்திருக்கிறேன். தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களை மிகவும் தெளிவாகவும், மற்றவர்களுக்குப் புரியும்படியும் பேசுவார்.

மதுரையில் தனிஷ்க் நகைக்கடை

இப்படிப்பட்ட பெண்கள் சோஷியல் மீடியாவில் இருக்க வேண்டும் என்று பலரிடம் உதாரணமாகக் கூறியிருக்கிறேன். ஆனால், கடைசியில் இப்படி ஒரு கொள்ளை சம்பவத்தில் அவர் சிக்கியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

மீனாட்சி நாச்சியாரும், நிஷாந்தும் டெக் பாஸ் யூடியூப் சேனலில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நிஷாந்த் எடிட்டராகவும் இருந்திருக்கிறார். காதலியின் பணத் தேவைக்காக கொள்ளையடிக்க நிஷாந்த் திட்டமிட்டதாக தகவல்கள் வருகின்றன. காதலி ஒரு விஷயத்தை கேட்டால் கடல் கடந்தாவது சென்று சம்பாதித்து கொடுக்கும் காதலர்கள் இருக்கிறார்கள். ஆனால், கொள்ளையடித்தாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எப்படிப்பட்ட காதல்?

கூடா நட்பு கேடாய் முடியும்

"கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதற்கு இது ஒரு உதாரணம்.. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் - நளினி விவகாரத்திலும் காதல் காரணமாக நளினி வாழ்க்கையையே இழந்தார். உண்மையிலேயே அப்பாவி.. ஆனால் தவறான தொடர்பு ஒருவருடைய வாழ்க்கையையே எப்படிப் பாதிக்கும் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

நிஷாந்த் தான், மீனாட்சியிடம் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.. உண்மையில், மீனாட்சி மதுரையில் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வீட்டை எப்படி கட்டுகிறார், அதற்கான வேலைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதையெல்லாம் அவரே வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

மீனாட்சி நாச்சியார்

ஒரு கட்டத்தில், அவ்வளவு பெரிய வீட்டை கட்டுவதற்குப் பணம் இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, தன்னிடம் பணம் இல்லை என்று நிஷாந்திடம் சொல்லியிருக்கிறார்.. காதலி ஒரு விஷயத்தை கூறிவிட்டால், கடல் கடந்தாவது சென்று பணம் சம்பாதித்து வந்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கிற எத்தனையோ காதலர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், கொள்ளையடித்தாவது பணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்று இவர் நினைத்திருக்கிறார்

இந்த கொள்ளையில் நிஷாந்த் பல நாட்கள் நகைக்கடையை நோட்டமிட்டிருக்கிறார். வெவ்வேறு தோற்றங்களில் கடைக்கு சென்றிருக்கிறார். தான் அணிந்திருந்த சட்டையைக்கூட எரித்திருக்கிறார். அதேநேரத்தில், தனி மனிதர் ஒருவர் இவ்வளவு நகைகளை எடுத்துச் செல்லும் அளவுக்கு நகைக்கடையின் செக்யூரிட்டி சிஸ்டம் எப்படி இருந்தது என்ற கேள்வியும் எழுகிறது. போலீசார் இரவு பகலாக உழைத்து குற்றவாளிகளைப் பிடித்திருக்கிறார்கள்.

இப்படியொரு தாய்

கொள்ளையடித்த நகைகளை கொண்டுவந்து மீனாட்சியிடம் கொடுக்கும்போது, அந்த பெண்ணாவது, "நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஒரு விஷயத்தை சொல்லிவிட்டேன். அதற்காக இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு வந்துவிட்டாயே?" என்று கேட்டிருக்க வேண்டாமா? ஆனால், அவர் அந்த நகைகளை வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த குடும்பமும் இதற்குத் துணையாக இருந்ததா என்பது தெரியவில்லை. "தைரியமாக இரு" என்று அந்தத் தாய் சொல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

மலேசியா நடிகை திருட்டு

பணம், சொத்து, பெரிய வீடு இருந்தாலும் சிலரிடம் திருட்டுப் புத்தி மாறுவதில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் பொருட்களை திருடி அலாரம் ஒலித்ததால் சிக்கிய 80-களின் பிரபல நடிகை பற்றிய செய்தியையும் எழுதியிருக்கிறேன். இத்தகைய பழக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் எங்கும் வெற்றி பெற முடியாது.

யூடியூப் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. தொழில்நுட்ப விஷயங்களைக்கூட சாதாரண மக்களுக்கு புரியும்படி சொல்லும் திறமை இருக்கிறது. இவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கும்போது ஏன் இந்த இழிவான புத்தி?

இன்ஃப்ளூயன்சர்களுக்கு கெட்ட பெயர்

இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த இன்ஃப்ளூயன்சர்களையும் திருடர்களாக பார்க்கும் நிலை உருவாகிறது. வழக்கில் என்ன முடிவு வரும் என்பது விசாரணைக்கு பிறகுதான் தெரியும். 5 அல்லது 10 ஆண்டுகள் சிறையிலிருந்து வந்தாலும், சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கும்? திருந்தி வந்தாலும் திருடர்களாகத்தான் பார்க்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி. இதைப் பார்த்தாவது திருந்துங்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+