இன்றும் கடும் சரிவைச் சந்தித்த தங்கம் விலை.. நகைப் பிரியர்கள் செம குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.72,560-க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Gold Rate Today Falls Sharply 680 Drop Per Sovereign in Chennai

தங்கம் விலை நிலவரம்

மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பொருளாதார ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது.

கடந்த சில நாட்களில்

கடந்த ஜூன் 21 ஆம் தேதி தங்கம் கிராமிற்கு ரூ. 25 அதிகரித்து ரூ. 9,235க்கும், சவரனுக்கு ரூ. 200 அதிகரித்து ரூ. 73, 880க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மார்க்கெட் விடுமுறை என்பதால் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 9,235-க்கும் ஒரு சவரன் ரூ 73,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூன் 23 அன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 73,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 குறைந்து ரூபாய் 9,230-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூபாய் 600 குறைந்தது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூபாய் 600 குறைந்து ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் இன்று 75 ரூபாய் விலை குறைந்து ரூ.9,155க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனையானது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறையுமா? அல்லது ஏற்றம் காணுமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இன்றைய விலை

இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 680 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 85 குறைந்து ரூ.9,070க்கு விற்பனை ஆகிறது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை

25.06.2025- ஒரு சவரன் ரூ.72,560
24.06.2025- ஒரு சவரன் ரூ.73,240
23.06.2025- ஒரு சவரன் ரூ.73,840
22.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
21.06.2025- ஒரு சவரன் ரூ.73,880
20.06.2025- ஒரு சவரன் ரூ.73,680
19.06.2025- ஒரு சவரன் ரூ.74,120
18.06.2025- ஒரு சவரன் ரூ.74,000
17.06.2025- ஒரு சவரன் ரூ.73,600
16.06.2025- ஒரு சவரன் ரூ.74,440
15.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
14.06.2025- ஒரு சவரன் ரூ.74,560
13.06.2025- ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025- ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025- ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025- ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+