Gold Rate Today: காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. தடாலடியாக சரிந்தது! பொதுமக்கள் ஹேப்பி
சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே நிதனமாகவே இருக்கிறது. பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது. இன்றைய தினம் இரு முக்கிய ரிப்போர்ட்கள் வெளியாக இருக்கும் நிலையில், தங்கம் விலை அதைப் பொறுத்தே மாறுபடும். இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை குறைந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தாண்டு கடைசி மாதத்திற்கு நாம் வந்துவிட்டோம்.. இந்தாண்டு தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை, கடன் பத்திரங்களையும் விட இந்தாண்டு அதிக லாபம் கொடுத்த முதலீடாகத் தங்கம் இருக்கிறது. ஒரே ஆண்டில் தங்கம் விலை சுமார் 67% உயர்ந்துள்ளது. இதுவரை இவ்வளவு வேகமாகத் தங்கம் விலை உயர்ந்ததே இல்லை எனச் சொல்லலாம்.

தங்கம் விலை
இந்தச் சூழலில் தான் கடந்த நவம்பர் மாதம் தங்கம் விலை ஓரளவுக்கு நிலையாக மாறியது. அதற்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் ரேட் தாறுமாறாக ஏறிய நிலையில், அதன் பிறகே தங்கம் விலை கொஞ்சம் நிலையாக மாறியது. கடந்த மாதம் முழுக்க இரண்டு நாட்கள் ஏறினால் அடுத்த இரு நாட்கள் சரிவு என்றே தங்கம் விலை இருந்து வந்தது.
அமெரிக்கா
இந்த மாதம் தங்கம் விலை ஓரளவுக்கு ஏறியிருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணமாகும். அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் நிலையில், அதில் வட்டி குறைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே விலை சற்று உயர்ந்தது.
மேலும், அமெரிக்காவில் இன்று வெள்ளிக்கிழமை பணவீக்கம் தொடர்பான முக்கியமான ரிப்போர்ட் வெளியாக இருக்கிறது. அதுவும் தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பணவீக்கம் 2%க்கு மேல் இருந்தால் வட்டி விகித குறைப்பை அமெரிக்க மத்திய வங்கி எடுக்காமல் போகலாம்.. அப்படி வட்டியைக் குறைக்கவில்லை என்றால் தங்கம் விலை குறையலாம்.. இதன் காரணமாகவே தங்கம் விலை பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது.
ரிசர்வ் வங்கி
இது தவிர இன்றைய தினம் நமது ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவிக்கவுள்ளது. இதில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் கூட தங்கம் விலை உயரும். இதனால் இந்த 3 விஷயங்களில் என்ன நடக்கும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உற்றுக் கவனித்து வருகிறார்கள்.
தங்கம் விலையைப் பொறுத்தவரை நேற்றைய தினம் அது சென்னையில் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ 96,160க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ 12,020க்கு விற்பனை செய்யப்பட்டது.. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ 1 குறைந்து, ரூ 200க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இதற்கிடையே இன்றை தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.96,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.20 குறைந்து ரூ.12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.196க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1.96 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000
04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840












Click it and Unblock the Notifications