Gold Rate Today: டிரம்ப் போட்ட குண்டு.. இன்று தாறுமாறாக எகிறிய தங்கம் விலை! ரேட்டை பார்த்தால் நெஞ்சு வலிக்குதே
சென்னை: தங்கம் விலை சாமானியர்கள் வாங்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டுவிட்டது. அமெரிக்கா கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஷட் டவுன் ஆகியிருப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று சென்னையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்தது.
இந்தியாவில் இப்போது பண்டிகை காலம். பொதுவாகவே நமது நாட்டில் இந்த பண்டிகை சீசனில் தான் வீட்டிற்கு மக்கள் தங்கம் வாங்குவார்கள். ஆனால், இப்போது தங்கம் விலை மிடில் கிளாஸ் மக்களால் கூட நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் முன்பு போல மக்களால் தங்கத்தை வாங்க முடிவதில்லை.

தங்கம் விலை
குறிப்பாக இம்மாத தொடக்கம் முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு நாட்கள் விலை மாற்றி அமைக்கும் அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் பிரதான காரணம் இரண்டு தான். இரண்டிற்கும் பின்னணியில் இருப்பவர் டிரம்ப் தான்.
காரணங்கள்
முதலில் கடந்த வாரம் சீனா மீது டிரம்ப் வர்த்தக போரை ஆரம்பித்தார். சீனா மீது வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 100% வரி விதிப்பேன் என அவர் அறிவித்தார். அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும். இதன் மூலம் விலை இரட்டிப்பாகலாம். அதேநேரம் சீனாவும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கக் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டணத்தை அறிவித்துவிட்டது. இது சர்வதேச வணிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல அமெரிக்காவில் ஷட் டவுன் தொடர்கிறது. செலவினங்கள் மசோதா தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசு முடங்கியது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை டிரம்ப் ஏற்க மறுப்பதே இதற்குப் பிரதான காரணமாகும். அமெரிக்காவின் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்வதும் தங்கம் விலை பறக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
அமெரிக்க வட்டி விகிதம்
இதுபோக அமெரிக்க பெடரல் வங்கி கூட்டமும் இந்த மாதம் இறுதியில் நடைபெறுகிறது. இதில் வட்டி விகிதம் குறைப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அப்படி வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் தங்கம் விலை உயரும். இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்தி வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரண ரூ.87,600ஆக இருந்த நிலையில், இப்போது அது ரூ.95,000 தாண்டிவிட்டது. அந்தளவுக்கு ஜெட் வேகத்தில் பறந்து வருகிறது.
தங்கம் விலை
நேற்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ. 95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்றும் இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ரூ.97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.12,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து 203 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
தங்கத்தின் மீது நம்பிக்கையே போச்சு.. வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. புலம்பும் முதலீட்டாளர்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications