வேலையை காட்டிய ரஷ்யா.. தங்க மார்க்கெட்டை கதற விடப்போகும் முக்கியமான மூவ்.. என்ன ஆகும் இனி?
சென்னை: ரஷ்யாவின் மத்திய வங்கி, நிதி அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனது இருப்பில் இருந்து முதல் முறையாக தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளது. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக அதிக அளவில் தங்க விற்பனை நடந்து வருகிறது.
உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.

இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
தங்கத்தை விற்கும் ரஷ்யா
இப்படிபட்ட நிலையில்தான் ரஷ்யா திடீரென தங்கத்தை விற்க தொடங்கி உள்ளது. அதன் மத்திய வங்கி தங்கத்தை விற்பனை செய்துள்ளது. தேசிய செல்வ நிதியத்தில் (NWF) இருந்து நடைபெற்ற முந்தைய தங்க பரிவர்த்தனைகளைப் போலவே இதுவும் உள்ளது. ரஷ்யாவின் தங்க கையிருப்பு 2,300 டன்களுக்கு மேல் உள்ளது, இது உலகில் ஐந்தாவது பெரிய இருப்பாகும்.
மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசுகையில், "சமீபத்திய ஆண்டுகளில் உள்நாட்டு தங்கச் சந்தையின் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், ரஷ்ய வங்கி இப்போது உள்நாட்டுச் சந்தையில் யுவான் பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமல்லாமல், தங்கம் மூலமாகவும் பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது" என்று தெரிவித்தார்.
இந்த விற்பனையின் நேரம் அல்லது அளவு குறித்த தகவல்களை வங்கி வெளியிடவில்லை. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு முன், NWF 405.7 டன் தங்கத்தை வைத்திருந்தது.
ரஷ்யாவிடம் எவ்வளவு தங்கம் உள்ளது
அதன்பின்னர், நிதி அமைச்சகம் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய 57% அல்லது 232.6 டன் தங்கத்தை விற்றுள்ளது. நவம்பர் 1 நிலவரப்படி 173.1 டன் தங்கம் மீதமுள்ளது. தங்கம் மற்றும் யுவான் உட்பட NWF இன் ஒட்டுமொத்த பணப்புழக்க சொத்துக்கள் 55% குறைந்து $51.6 பில்லியனாக உள்ளது.
இந்த தங்க விற்பனை, ரூபிளை ஆதரிக்கும் வகையில் சந்தைக்கு நாணயத்தைச் செலுத்த மத்திய வங்கிக்கு உதவுகிறது என்றும், யுவான் இருப்புக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
தங்க விற்பனை என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
ரஷ்யா தங்கத்தை விற்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் இருப்பு அதிகரிக்கும். அதாவது தங்கத்தை மற்ற நாடுகள் எளிதாக வாங்க முடியும். இதனால் தங்கம் விலை குறையும். தங்கம் விலை வேகமாக சரியும். தங்கத்தை மற்ற நாடுகள் விற்க விற்க அதன் விலை வேகமாக குறையும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே சீனா தங்கள் வசம் உள்ள பல டன் தங்கத்தை விற்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
-
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
இங்கிட்டு ஹரி நாடார் மாதிரி..அங்கிட்டு அவரு! கழுத்து வலிக்க வலிக்க தங்கநகைகள்! ஒரே நாளில் உடைத்த ஐடி -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications