Gold Rate Today: ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினம் தினம் புதிய உச்சத்தை தொடும் வகையில் தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இன்றாவது விலை குறையுமா என்று எதிர்பார்த்த நிலையில், தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.8,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து 106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 20 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 560-க்கு விற்பனை ஆகி புதிய உச்சத்தை தொட்டது. நேற்று விலை உயர்வின் மூலம் பவுன் ரூ.64 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது தங்கம் விலையில் புதிய உச்சமாகும். இதனால் தங்கம் விலை இன்றாவது குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

gold price Chennai gold

இன்றைய தங்கம் விலை எவ்வளவு

இதன்படி இன்று தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் விலை 64,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.8075க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.25 குறைந்து ரூ.8,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்து ஒரு கிராம் 106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விண்ணை தொடும் தங்கம் விலை

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து அதிர வைத்து வருகிறது. ஒரு பவுன் எங்கு 60 ஆயிரத்தை கடந்து விடுமோ என்று அச்சப்பட்ட காலம் எல்லாம் மலையேறி போய் தற்போது எங்கு 70 ஆயிரத்தை தாண்டிவிடுமோ என அஞ்சும் அளவுக்கு விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் தங்கத்தை பொறுத்தவரை அணிகலன்களாக விரும்பி அணியும் பழக்கம் மக்களிடையே அதிகம் உள்ளது. இதனால், தங்கத்தின் விலை உயர்வு சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினைரையும் நேரடியாக பாதிக்கிறது. தங்கம் என்பது பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுவதால் பலரும் விரும்பி வாங்கி வைப்பார்கள்.

65 ஆயிரத்தை நெருங்குகிறது

இதனால், விலை குறையும் போது தங்கத்தை வாங்கலாம் என நினைப்பவர்களுக்கு தினம் தினம் அதிர்ச்சியை சந்தை நிலவரம் காட்டுகிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிரடியாக விதித்து வரும் வரி காரணமாக தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் விலை ஜெட் வேகம் ராக்கெட் வேகம் இல்லை.. மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இடையிடையே சற்று குறைந்தாலும் விலை அதிகரிக்கும் போது விருட்டென அதிகரித்து விடுகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த ஆண்டு சவரன் 50 ஆயிரம் என்ற ரேஞ்சில் இருந்த தங்கம் விலை, இந்த ஆண்டு 60 ஆயிரத்தை தாண்டி தற்போது ரூ 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நடப்பு பிப்ரவரி மாத துவக்கத்தில் தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது. இதனால் சவரன் தங்கம் ரூ.64,440-க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராம் ரூ.8,055-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.108-க்கு விற்பனை ஆனது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.108-க்கு விற்பனையாகிறது. தங்க்ம் விலையின் புதிய உச்சமாக இது பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்றாவது குறையுமா? என்ற ஏக்கம் நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இன்று குறையுமா? இல்லை இன்றும் கூடி மேலும் அதிர்ச்சி கொடுக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.64,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.8,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.2 குறைந்து 106க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+