கொழு கொழு தொப்பை குறைய.. இந்த 5 பொருள் மட்டுமே போதும்.. கண்ணெதிரே உடல் எடை சூப்பரா குறையும் பாருங்க
சென்னை: உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள், அதிக கலோரி இல்லாத உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். இதற்கு பெரிதும் உதவுவது நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்தான். இந்த 5 காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொண்டாலே போதும், நிறைய பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சௌ சௌ காய் பெரிதும் உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதில், சௌசௌ அதிக பயன்தருகிறது..
செள சௌ : வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடுகிறது.. மேலும் மிகமிக குறைந்த கலோரிகளும், மிக மிக அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. அதனால், வெயிட் லாஸுக்கு, சௌசௌ சாப்பிடுவதை முயற்சி செய்து பார்க்கலாம்.

சிலருக்கு வயிறு மற்றும் இடுப்பில், அதிகமாக கொழுப்புகள் சேர்ந்து, நடக்கும்போதும், உட்கார்ந்து எழும் போதும், அசௌகரியத்தை தந்துவிடும்.. இப்படிப்பட்ட பாதிப்புகளை சரி செய்து, வயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து இந்த காய் வெளியேற்றிவிடும்.. இந்த காயை வேகவைத்து பொரியல் அல்லது சாலட் போல செய்து சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் சாப்பிடலாம், சூப் வைத்தும் குடிக்கலாம்..
ப்ரோக்கோலி: அடுத்ததாக புரோக்கோலியை சொல்லலாம்.. முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி.. ஒரு கப் ப்ரோக்கோலியில், ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம், பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன.. அதிலும், நார்ச்சத்துக்கள் மிகவும் அதிகம் நிறைந்திருக்கின்றன.
கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு.. அதனால்தான் உடல் மெலிய நினைப்பவர்களை, இதை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.. இதை சாப்பிட்டால் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரைந்துவிடுமாம்.
ப்ரோக்கோலி காபி: இந்த ப்ரோக்கோலியில் காபி போட்டு குடிக்கலாம்.. புரோக்கோலி பொடி என்று கடைகளிலேயே ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் வீட்டிலேயேயும் எளிதாகத் தயாரிக்க முடியும். ப்ரோக்கோலியை துருவிக்கொண்டு, வெயிலில் உலர்த்தி காயவைத்து பொடியாக மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். பாலில் காபி தூள் கலக்கும்போது, இந்த புரோக்கோலி பவுடரையும் ஒரு ஸ்பூன் கலந்து காபி போட்டு குடித்தால், உடல் எடை குறையும்.
சுரைக்காய்: இந்த சுரைக்காயை பொறுத்தவரை, நீர்க்காய் எனப்படுகிறது.. சுமார் 92% சதவீதம் நீர் + தாதுக்கள் உள்ளன.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இந்த காய் அவசியம் தேவை.. சுரைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளதால், இதயத்தை பராமரிக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. இதில் நார்ச்சத்துக்களும் நிறைய உள்ளன.. சுரைக்காய் கூட்டு, பொரியலைவிட, ஜூஸ் தயாரித்து குடித்தால், உடலில் இருக்கும் நச்சுகள் எளிதாக வெளியேறும்.. சருமம் பளபளப்பாக இருக்க உதவும்..
சுரைக்காய் ஜூஸ்: சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் குட்டி குட்டி துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.. பிறகு, சுரைக்காய், சிறிது இஞ்சி, புதினா இலைகள், ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் என அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்... ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் கலக்கி, அதையும் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.. இறுதியில், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது கல்உப்பு சேர்த்து, வடிகட்டி குடிக்கலாம்..
பீன்ஸ்: பீன்ஸ் வகையில் நிறைய இருந்தாலும், உடல் எடை குறைவதற்கு உதவுவது பச்சை பீன்ஸ்தான்.. இந்த பீன்ஸில், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டின், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், பொட்டாசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம் இன்னும் ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளன..
கொழுப்பு குறைவாக உள்ள பீன்ஸில், நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்தானது 9% சதவீதம் உள்ளது. அதனால்தான், உடல் எடையை குறைக்க இது மிகச்சிறந்த உணவாக தேர்வு செய்யப்படுகிறது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியெடுக்காது.. ஜீரணி சக்தியும் அதிகரிக்கும்..
தசைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை தடுப்பதுடன், இதயத்தையும் காக்கிறது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என இரண்டு இந்த பீன்ஸில் உண்டு.. கொழுப்பின் அளவை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவது பீன்ஸிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களாகும்.. குடல் இயக்கங்களை ஊக்குவித்து, மலச்சிக்கலை தடுப்பது, கரையாத நார்ச்சத்துக்கள் ஆகும்.
குடை மிளகாய்: வைட்டமின் C, உணவு நார்ச்சத்து, வைட்டமின் E, B6, ஃபோலேட் நிறைந்த குடைமிளகாயில், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளது.. வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், எடை இழப்புக்கும் உதவும். கொழுப்பை வேகமாக எரிப்பதில் இந்த காய்க்கு பெரும்பங்கு உண்டு.
கரையும் கொழுப்பு: இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் துணைபுரிகிறது.. குடைமிளகாயில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் குறைவாக இருப்பதால்தர்ன, உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. குடைமிளகாயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைத்து, பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.. பல வகைகளில், உடல் பருமனை எதிர்த்துப் போராடக்கூடிய அம்சங்களை இந்த காய் பெற்றுள்ளது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications