மீனுக்கு வந்த டிமாண்டு.. மத்தி மீனின் மவுசு.. உடல் எடை குறைக்கணுமா? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சென்னை: ஒருகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, மத்தி மீனுக்கு இன்று வேற ரேஞ்சுக்கு டிமாண்டு கூடிவிட்டது.. காரணம், மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனில் உள்ளதுதான்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தி மீன் என்பார்கள்.. கேரளத்தில் இதை, சாளை, பேசாளை என்பார்கள்.. அவர்களுக்கும் சென்னையில் இருந்துதான் மீன்கள் ஏற்றுமதியாகின்றன.
இந்த மீனின் பயன்பாடுகள் பற்றி ஆரம்பத்தில் அவ்வளவாக தெரியவில்லை.. இதற்குபிறகுதான், மீன் மருத்துவம் என்றாலே, அது மத்தி மீன் மருத்துவம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, முக்கியத்துவம் கூடிவிட்டது.

சத்துக்கள்: சத்துக்கள் 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் எராளமாகவும் நிரம்பிஉள்ளன. இவை அனைத்தையும்விட, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால், இதய நோய்கள் அத்தனைக்கும் இந்த மத்தி உபயோகப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைரியமாக சாப்பிடக்கூடியது இந்த மத்தி மீன்.. இதனால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படும். நீரிழிவு வராமல் தடுக்கவும் இந்த மத்தியை தொடர்ந்து சாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கவும் மத்திமீன் பேருதவி புரிகிறதாம்.
கால்சியம்: மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.. இதிலுள்ள கூடுதல் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கக்கூடியது. அயோடின் கலந்த தாது சத்துக்கள் அதிகளவு உள்ளதால், முன்கழுத்து கழலை நோய்களை வராமல் தடுக்கலாம்.
கர்ப்பக்காலத்தில் பெண்கள், இந்த மீனை சாப்பிட்டுவரும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும். அதேபோல, மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டியோபெராசிஸ் என்ற பிரச்சனைக்கு ஆளாகாமல் தடுப்பதும் இந்த மத்தி மீன்தான்.
கண் குறைபாடுகள்: முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த மீனை சாப்பிட்டு வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும்.. இந்த மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து இருப்பதால், கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தோல் நோய், மூளை, நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, போன்ற பிரச்சனைகளுக்கு மத்தி மீன் சிறந்தது..
வைட்டமின் D சத்து அதிகம் உள்ளதால், பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. உடல் எடை குறைப்பவர்களுக்கு அருமருந்து இந்த மீன்..
உடல்எடை: ஜிம்முக்கு போகிறவர்கள், உடல்எடையை குறைக்க நினைப்பவர்கள், வாரம் 2 முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால், அத்தனையும் ஆரோக்கியம்.. உடல்எடை குறைந்து கட்டுக்கோப்பாக காட்சிதரும். காரணம், மத்தியில் இருக்கும் புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது.. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும்.
மாத்திரைகள்: தமிழகம் முழுவதும் தாராளமாக இந்த மீன் கிடைத்தாலும், இதன் மருத்துவ உண்மை வெளிப்பட்டபிறகு, மத்தி மீனின் விலை இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகளே தயாராகின்றன.. அந்த அளவுக்கு சருமத்தை பளபளப்பாக இந்த மத்தி மீன் உதவுகிறது. எந்தவித மருந்து, கிரீம்கள் இல்லாமல், இயற்கையான பளபளப்பை இந்த மீன் தரக்கூடியது.
பொதுவாக கடல்வாழ் உயிரினங்களில் நச்சு இருக்கும் என்பார்கள்.. ஆனால், அதெல்லாம் பெரிய மீன்களில் தான் உண்டு. மத்தி மீனில் குறைவான அளவு நச்சுதன்மையே இருக்கும் என்பதால், தயக்கமின்றி தாராளமாகவே இந்த மீனை எடுத்துக் கொள்ளலாம்.. குறைந்த விலையில், பல உடல்தொந்தரவுகளை விரட்டியடிக்கக்கூடியது இந்த மத்தி மீன்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications