வேக வைத்த முட்டையா? இல்லை ஆம்லெட்டா? உடலுக்கு எது ரொம்ப ஆரோக்கியமானது தெரியுமா?
சென்னை: வேக வைத்த முட்டைகளில் அதிகம் புரதம் இருக்கிறதா? இல்லை ஆம்லெட்டில் அதிகளவு புரதம் இருக்கிறதா என்று ஒரு சிலருக்கு சந்தேகம் ஏற்படும். அவித்த முட்டைகளால் உடலுக்கு அதிக நன்மையா அல்லது ஆம்லெட்டால் அதிக நன்மையா என்ற சந்தேகமும் அதிம் பேருக்கு இருக்கு. இதில் எது சிறந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அடிக்கடி முட்டையை பயன்படுத்துவது உண்டு. ஹோட்டலுக்கு போனால் பரோட்டா சாப்பிடும் பலரும் ஆம்லேட்டாகவோ அல்லது ஆஃபாயிலாகவோ சாப்பிட்டுவது வழக்கம். இதேபோல் பிரியாணியிலும் அவித்த முட்டைகள் வழங்கப்படுவதுண்டு. இப்படி பலரும் அடிக்கடி சப்பிடும் முட்டைகளில் அதிகளவில் புரதம் இருப்பது அனைவரும் தெரிந்தது.

முட்டைகள்
ஆனால் அவித்த முட்டைகளில் அதிகம் புரதம் இருக்கிறதா? இல்லை ஆம்லெட்டில் அதிகளவு புரதம் இருக்கிறதா என்று ஒருசிலருக்கு சந்தேகம் ஏற்படும். இதேபோன்று அவித்த முட்டைகளில் அதிக சத்து உள்ளதா? உடலுக்கு நன்மை தருமா அல்லது ஆம்லெட்டில் அதிக சத்து இருக்கிறதா, உடலுக்கு நன்மை தருமா என பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு. இது பற்றி இங்கு பார்க்கலாம்.
முட்டைகளில் புரதம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து இருக்கின்றன. பெரும்பாலானோர் காலை வேளைகளில் முட்டைகளை அதிகம் சாப்பிடுகின்றனர். ஒரு சிலர் வேக வைத்த முட்டைகளையும், ஒரு சிலர் குறிப்பாக பெண்கள் ஆம்லெட்டாகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இரு தரப்பினரும் முட்டையைத் தான் சாப்பிடுகிறார்கள் என்றாலும் அவர்களுக்கு வெவ்வேறான அளவு சத்துக்களே கிடைக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மதிப்பு, கலோரி அளவு மற்றும் ஆரோக்கிய நன்மைகளில் அவித்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வேக வைத்த முட்டையில் ஊட்டச்சத்துக்கள்
அமெரிக்க விவசாயத் துறையின் தரவுகளின்படி, ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் உள்ளது. இது தசை வளர்ச்சிக்கும், அதன் இயக்கத்திற்கும் இன்றியமையாததாக இருக்கிறது. வேகவைத்த முட்டைகளை பொறுத்தவரை வேலைப்பாடுகள் அதிகம் தேவையில்லை. தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தாலே போதும்.. 10 நிமிடத்தில் ரெடி ஆகிடுவிடும். அவித்த முட்டையில் எந்தவிதமான கூடுதல் பொருட்களும் சேர்க்காமல் அதன் ஊட்டச்சத்துக்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது. எளிதில் ஜீரணமாகும். அவித்த முட்டை செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு கூட ஏற்ற உணவாக இருக்கின்றது. புரதம் அதிகம் உண்டு. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி, மூளை செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. கொழுப்புகள் இல்லாத ஊட்டச்சத்துக்களுக்கு அவித்த முட்டை சிறந்தது.
ஆம்லெட் முட்டையில் ஊட்டச்சத்துக்கள்
அவித்த முட்டைகள் போல் இல்லாமல் ஆம்லெட்டில் நமக்கு தேவையான சில காய்கறிகளையும் சேர்த்துக்கொள முடியும். இதனால் நாம் அதிக சத்துக்களை பெற முடியும். அதிலும் குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை ஆம்லெட்டில் சேர்த்து உட்கொள்ளும்போது நமக்கு அவித்த முட்டைகளை விட அதிக சத்துக்களை பெற முடியும். எனவே, ஆம்லெட்டின் ஆரோக்கியம் சேர்க்கப்படும் பொருட்களின் அடிப்படையில் அமையும்.
அதேவேளையில் ஆம்லெட்டில் எண்ணெய் அதிகம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், கலோரி, கொழுப்பு உணவு பொருட்களை சாப்பிடாமல் தவிர்ப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பதே உடல்நலனுக்கு நல்லதாகும்.
கலோரி அளவைப் பொருத்தவரை, வேகவைத்த முட்டைகள் குறைந்த கலோரி கொண்ட ஒரு சிறந்த உணவாக இருக்கின்றன. ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 78 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதே நேரத்தில், ஆம்லெட்டுகளில் கலோரி அளவு பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொறுத்து மாறுபடும். காய்கறிகள் ஆரோக்கியமானவை என்றாலும், அதிக எண்ணெய் அல்லது சீஸ் கலோரி அளவை அதிகரிக்கும்.
எது உடல்நலனுக்கு சிறந்தது?
வேகவைத்த முட்டைகள் எளிமையானவை. அவை குறைந்த கலோரிகளுடன் அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. அவை உடல் எடையை நிர்வகிக்க மிகவும் ஏற்றதாக உள்ளன. ஆம்லெட்டுகள் கூடுதல் பொருட்களைச் சேர்த்து ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. ஆனால், அதிக எண்ணெய் அல்லது சீஸ் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முட்டைகளை அதிகமாகச் சாப்பிடுவது எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும். இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், அளவுக்கு அதிகமாக புரதத்தைச் சாப்பிடுவது சிறுநீரகப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே, முட்டைகளை மிதமான அளவில் உட்கொள்வது மிகவும் முக்கியம்.
வேகவைத்த முட்டைகளோ அல்லது ஆம்லெட்டுகளோ இரண்டுமே தனித்துவமான நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. உங்கள் உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கிய இலக்குகளைப் பொறுத்து இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், எந்த உணவை உட்கொள்வதாக இருந்தாலும், அதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. ஆகவே, முட்டை வகைகளைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்ததே ஆகும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications