கல்லீரல் நோய் காலியாகணுமா? வெறும் வயிற்றில் வேப்பிலை மென்று சாப்பிடுங்க.. இந்த 1 ஜூஸ் போதுமே.. செம
சென்னை: வேப்பங் கொழுந்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதை எப்படி சாப்பிட்டால், நம்முடைய உடல்நலத்துக்கு நன்மை கிடைக்கும் தெரியுமா?
வேப்பிலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.. உள்ளுறுப்புகள் சீராக செயல்படவும், சருமம் பொலிவுடன் காணப்படவும் இந்த வேப்பிலைகள் ஒரு வரப்பிரசாதமாகும்.

சுவாச கோளாறுகள்: சுவாச கோளாறுகள் உள்ளவர்கள், இந்த வேப்பிலையை தவிர்க்கவே கூடாது.. குடல் புழுக்களை அகற்றக்கூடியது இந்த வேப்பிலைகள். பெரியவர்கள் வெறும் வயிற்றில் இந்த வேப்பிலையை அரைத்து விழுங்கினால், வயிறு சுத்தமாகும்.
அதேபோல, குழந்தைகளுக்கு கொழுந்து இலைகளை கட்டாயம் தர வேண்டும். இது வேப்பிலை அளவுக்கு, கொழுந்து இலைகள் கசக்காது.. லேசான இனிப்பு சுவை இருக்கும்.. இந்த கொழுந்தினை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குழந்தைகளுக்கு தரும்போது, வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.
தொற்றுகள்: வேப்பங்கொழுந்தினை அரைத்து, அதில் சிறிது தேனை தடவி வெறும் வயிற்றில் விழுங்கினால், உடலில் எப்போதுமே தொற்று தாக்காது.. அலர்ஜி இருந்தாலும் மறைந்துவிடும்.. 4 வேப்பிலைகளை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.. ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும்.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவும்.
வேப்பிலைகளை மென்று தின்ன விருப்பமில்லாதவர்கள், வேப்பிலையில் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம்.. இதனால், மஞ்சள் காமாலை பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்..
கல்லீரல்: கல்லீரலில் பிரச்சனை இருந்தாலும், இந்த வேப்பிலை சாறு குடிக்கும்போது அது சரியாகும்.. கல்லடைப்பு கல்லீரல் வீக்கம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் தினமும் காலையில் சாப்பிட்டு வரலாம். வேப்ப இலைகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
வயிறு சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த வேப்ப இலை ஒரு சிறந்த மருந்து. வேப்ப இலைகளில் உள்ள நார்ச்சத்து நம் உடலில் குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. உணவு குழாய்களில் கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் இதனை அடிக்கடி சாப்பிட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், 20 வேப்பிலைகளை போட்டு, அந்த நீரை பாதியாகும் வரை சுண்ட காய்ச்சி, இலைகளை வடிகட்டி குடித்து வரவேண்டும். உணவுக்கு முன்பு அரை டம்ளர் இதில் குடித்து வரும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. வைரஸ்கள், தொற்றுக்களிலிருந்து நம்மை காக்கும் சக்தி இந்த வேப்பிலைகளுக்கு உள்ளது..
அதனால்தான், வெயில் காலமாக இருந்தாலும், அம்மை நோய் தாக்கிய நேரங்களிலும், இந்த வேப்பிலைகள் அருமருந்தாகின்றன.. அம்மை புண்களை விரைந்து ஆற்றக்கூடிய தன்மை இந்த இலைகளுக்கு உள்ளது. சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு கிருமிநாசினியாகவும் இந்த வேப்பிலை திகழ்கிறது..
பாத வெடிப்புகள்: அதேபோல, பாத வெடிப்புகள், பாத எரிச்சல், நகசுத்தி என எந்த பிரச்சனை இருந்தாலும், வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தாலே தீர்வு கிடைக்கும்.
வெறுமனே இந்த இலையை தண்ணீர் விட்டு அரைத்து சருமத்தில் தடவி வந்தால், சொரி, சிரங்குகள், புண்கள் மாயமாகிவிடும். ஆறாத ரணம்கூட ஆறும்.. பழுத்து உடையாத கட்டியும் உடைந்து குணமாகும். இந்த விழுதினை தலைக்கும் தேய்த்து பூசி குளிப்பதால், தலையில் உள்ள புண்கள் ஆறிவிடும்.. அத்துடன் பொடுகு பிரச்சனையும் நீங்கும்.
இந்த அளவுக்கு நன்மைகள் தருகிறது என்பதற்காக, அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.. இதனால், வேறு ஏதாவது உடல் நலபிரச்சனைகள் வரலாம்..!












Click it and Unblock the Notifications