விந்தணு உற்பத்தி.. சிறுநீரகம், கல்லீரலை காக்கும் காசினி கீரை.. நீரிழிவு நோயாளி காசினியை விடக்கூடாது
சென்னை: சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்று சொல்லக்கூடிய காசினி கீரைகள், எந்தெந்த வகையில் நமக்கு உதவுகிறது தெரியுமா?
காணாம்கோழி கீரையைதான் காசினி கீரை என்கிறார்கள். வைட்டமின் A, B, C, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்துக்கள் காசினி கீரையில் அடங்கியிருக்கிறது. இன்சுலின், லாக்டுசின், குமாரின், சாப்போனின், டானின், பிளேவோனாய்டுகள் மற்றும் ஆல்கலாய்டுகள் அதில் செறிந்து காணப்படுகின்றன.

உடல் வெப்பத்தை தணிக்கக்கூடிய இந்த காசினி கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சிறுநீரகத்தில் கற்களை கரைத்து வெளியேற்றும் தன்மை இந்த காசினி கீரைக்கு உண்டு.. எப்போதுமே கற்களை சிறுநீரகத்தில் அண்டாத பண்பும் இந்த காசினி கீரைக்கு உண்டு.
கீரை பவுடர்: இன்சுலின் சுரப்பை சுரக்க செய்யக்கூடியது இந்த காசினி கீரை. அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை கட்டாயம் சமைத்து சாப்பிட சொல்கிறார்கள். காசினி கீரையாக சமைத்து சாப்பிட முடியாவிட்டாலும், பவுடர் வடிவிலேயே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.. அல்லது இந்த கீரையின் பவுடரை நாமே வீட்டில் தயாரிக்கலாம். கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் தூள் செய்து வைத்து கொண்டு பயன்படுத்தலாம்..
இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நீரிழிவு நோய் கட்டுப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் பாதிப்பு இருந்தால், இந்த கீரையை விழுதாக அரைத்து பற்று போல வைத்து கட்டினால், விரைவில் புண்கள் ஆறிவிடும். அல்லது இந்த கீரையின் சாற்றினையும், புண்களின் மீது தடவலாம்.
காசினி கீரையுடன், சிறுகுறிஞ்சான் இலைகள் இரண்டையும் சமமாக எடுத்து உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் கணைய கோளாறுகள் முற்றிலுமாக தீரும்..
ரத்தசோகை: உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது காகினி கீரை. எனவே காசினி கீரை பொடியை தினமும் இரவு நேரத்தில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறைய துவங்குமாம். அஜீரணத்தை போக்கக்கூடியது காசினி கீரை.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், காசினி கீரையை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ரத்தசோகை நீங்குவதுடன், ரத்தமும் சுத்திகரிப்படையும்.
கல்லீரல், சிறுநீரகம், இதயம் என மிக முக்கியமான உள்ளுறுப்புகளை காக்கக்கூடியது இந்த காசினி கீரை. தேவையற்ற கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்கிறது. காசினி கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயம் போல வைத்து குடித்தால் கல்லீரல் வீக்கம் குறையும். காசினி கீரை விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும்.
வெள்ளைப்படுதல்: ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், வெள்ளைப்படுதல் தொந்தரவு இருந்தாலும், இந்த காசினி பவுடரை பயன்படுத்தலாம். இந்த பொடியை அரை ஸ்பூன் தேனில் குழைத்து 21 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் சரியாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதால்தான், இந்த காசினி கீரையை, கடவுளின் வரம் என்று அழைக்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, காசினி கீரை பவுடரை மருந்தாக உட்கொள்வதே சிறந்த ஆரோக்கியம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications