மூக்கடலை.. அப்பறம் வேர்க்கடலை.. ஆமா, நீரிழிவு நோயாளிகள் "பருப்பு" சாப்பிடலாமா?.. சூப்பரான டிப்ஸ்
சென்னை: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பருப்புகளில், வேர்க்கடலையும், கொண்டைக்கடலையும் முக்கியம் என்கிறார்கள்.
பொதுவாக, நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது என்பார்கள்.. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு, வேர்க்கடலை மிகவும் நல்லதாம்..

இதிலுள்ள மெக்னீசியம், இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள், வேர்க்கடலையை தைரியமாக சாப்பிடலாம் என்கிறார்கள்.
வேர்க்கடலை: அதுமட்டுமல்ல, தேசிய வேர்க்கடலை அமைப்பு, இதுகுறித்து சொல்லும்போது, "சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க வேர்க்கடலையையும், வேர்க்கடலை வெண்ணெயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்கிறது. காரணம், வேர்க்கடலையிலும், வேர்க்கடலை வெண்ணையிலும், சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது, அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு முற்றிலும் பாதுகாப்பானது.. ஆனால், ஒரு கையளவு வேர்க்கடலை எடுத்துக் கொண்டாலே போதும் என்கிறது.
சர்க்கரை நோயாளிகளை போலவே, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும் வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சிறந்தது என்கிறார்கள். வேர்க்கடலையை கொறிக்கக்கூடாது.. அப்படியே விழுங்கவும் கூடாது.. இது செரிமானமாக தாமதமாகும் என்பதால், மெதுவாக மென்றுதான் சாப்பிட வேண்டும்.
வறுத்த வேர்க்கடலை: வறுத்த வேர்க்கடலையைவிட அவித்த வேர்க்கடலை நல்லது.. கசப்பாக இருக்கும் வேர்க்கடலையை சாப்பிடக்கூடாது. இது வயிறு உபாதைகள் உட்பட பல்வேறு தொந்தரவுகளை தரலாம். அதேபோல, உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், உடலில் சோடியம் அதிகமாகிவிடக்கூடும்..
அதேபோல, கொண்டைக்கடலை என்று சொல்லப்படும் மூக்கடலையில், 12.5 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், உடல் எடையை குறைப்பதில், இந்த பயிறுக்கு முக்கிய பங்குண்டு இருப்பதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது.
நார்ச்சத்து: இதில், ஓரளவு கொழுப்பு இருந்தாலும்கூட, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாகும்.. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பயிறு நல்லது. தினமும் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நிரூபிணம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பாதாமில் குறைவான கலோரி உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தினமும் 5 பாதாம் பருப்பை சாப்பிடலாம் என்கிறார்கள். பாதாம் சாப்பிட்டால், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும் என்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, பாதாமை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோயையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்திவிடுமாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பையும் தடுத்து நிறுத்தி விடுகிறது.
பருப்புகள்: அதுபோலவே, கடலை பருப்பும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாம். பொட்டுக்கடலை, பாசிப்பயறு, தோல் நீக்காத உளுத்தம்பருப்பு, போன்றவை, சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய பருப்புகளாகும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications