தொப்பை தொங்குதா.. தொள தொள ஊளைச்சதையை சர்னு குறைக்கும் சீக்ரெட்.. அடடே, இது மட்டும் போதுமே
சென்னை: உடல் எடையை குறைக்க, பச்சை காய்கறிகளும், கீரைகளும், பழங்களும், போதுமான உடற்பயிற்சியும், போதுமான தூக்கமும், நிம்மதியான மனநிலையும் கட்டாயம் தேவை. அதேசமயம், உணவில், சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், உடல் எடை குறைய வெகுவாக குறைய உதவியாய் இருக்கும்.
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்து வந்தால், உடலிலுள்ள ஊளைச்சதை குறையும்.. தொப்பை வெகுவாக குறைய துவங்கும்..

வெள்ளரிக்காய்: அதேபோல, சிறிய வெள்ளரிக்காயை துண்டுகளாக்கி, அதை சொம்பு நீரில் போட்டு, எலுமிச்சை சாறு, ஒரு கைப்பிடி புதினா இலை, 2 ஸ்பூன் இஞ்சித்துருவல் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைத்துவிட வேண்டும். அதற்கு பிறகு அந்த தண்ணீரை குடித்தால், விரைவில் உடல் எடையில் மாற்றம் தெரிய ஆரம்பிக்குமாம்.
வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடல் பருமன் குறைய துவங்குமாம்.. வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்கிறார்கள். சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டாலும் ஊளைச்சதை குறையுமாம்..
வெங்காயம்: அடி வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் தேனும், வெங்காயமும் உதவியாக உள்ளன. காரணம், சின்ன வெங்காயம், தேன், இந்த இரண்டிற்குமே நச்சுக்களை முறிக்கும் தன்மை உண்டு.
அதாவது, சின்ன வெங்காயத்தை தோல் உறித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும்வரை தேன் ஊற்றி 2 நாட்கள் அப்படியே வைத்துவிட்டு 3வது நாள் பயன்படுத்த துவங்கினால், கெட்ட கொழுப்பு நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.
இதில் நாம் கட்டாயம் தவிர்க்க கூடாதது பிரண்டை.. உடலிலுள்ள கொழுப்பை கறைப்பதில் பிரண்டையின் பங்கு அதிகமானது.. கொழுப்பு எரிக்கும் சக்திகளை அதிகப்படுத்தும் பண்பு இந்த பிரண்டைக்கு உண்டு.. கெட்ட கொழுப்பான எல்டிஎல் அளவை இந்த கொள்ளு குறைக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது இந்த பிரண்டை.
பிரண்டை: இடுப்பு, மற்றும் தொடை பகுதியில் இருக்கும் அதிகப்படியான சதையை குறைக்கவும் துணைபுரிகிறது. இதனால், இதயத்துக்கு நன்மை தருகிறது. இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைபடாமல், ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது. அந்தவகையில், வாரம் 2 முறையாவது பிரண்டையில் துவையல் செய்து சாப்பிடலாம்.. இதை எப்படிசெய்ய வேண்டும் தெரியுமா?
பிரண்டை ஒரு கட்டு வாங்கி சுத்தம் செய்து, தோலையும் நீக்கிவிட்டு, கழுவி வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் நல்லெண்ணெய், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு , இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், சிறு துண்டு தேங்காய் என ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு பிரண்டையை கொட்டி வதக்கி, உப்பு சேர்க்க வேண்டும். இறுதியில் இவைகளை ஆறவைத்து, மிக்சியில் அரைத்து எடுத்தால் துவையல் ரெடி. பிரண்டையில் எப்போதுமே புளி சேர்ப்பது அவசியம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications