இத்துனூண்டு கிராம்பு.. வெறும் வயிற்றில் 2 சாப்பிடுங்க.. மேஜிக்கை பாருங்க.. ஆச்சரிய கிராம்பு எண்ணெய்
சென்னை: சித்த மருத்துவத்தில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது இந்த கிராம்பு.. இந்த கிராம்பு மூலம் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கின்றன என்பதை பார்ப்போம்.
நறுமண பொருளாக மட்டுமே இந்த கிராம்பை நாம் சுருக்கிவிடுகிறோம். இந்த கிராம்பில் உள்ள நன்மைகளை வைத்து, ஒரு பெரிய லிஸ்ட் போட்டாலும் போதாது..

கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் என பல சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன..
அதனால்தான், ஒரு நாளை துவங்கும்முன்பு, வெறும் வயிற்றில் 2 கிராம்பையாவது சாப்பிட வேண்டும் என்கிறார்கள். அல்லது, இரவு தூங்கும்போதாவது ஒரு கிராம்பை வாயில் போட்டுக்கொண்டு மென்று விழுங்கிவிட வேண்டும்.
சத்துக்கள்: இந்த கிராம்பு நன்மைகள் ஏராளம்.. கல்லீரல் பாதுகாப்புக்கு சிறந்தது. வயிற்றுப்புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. வாய் துர்நாற்றம் ஏற்படாது.. நாள் முழுவதும் புத்துணர்வு கிடைக்கும்.. அஜீரணம் நீங்கும்.. ஜலதோஷம், சளிக்கு நிவாரணம் தரக்கூடியது.
பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் இந்த ஒரே ஒரு கிராம்பு நீக்கிவிடும். பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம், போன்றவைகளை கிராம்பு தீர்க்கக்கூடியது.. பல் வலி மட்டுமல்ல, காது வலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்தான் பயன்படும்.. அதனால்தான், பற்பசைகளில் முக்கிய மூலப்பொருளாக இந்த கிராம்பு இடம்பெற்றுள்ளது..
தலைவலி: தலைவலி என்றாலும்கூட, இந்த கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தலாம்.. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் கிராம்பு உதவுகிறது.. ஜீரண கோளாறை நீக்கும் சக்தி அபரிமிதமாக உள்ளதால்தான், அசைவ உணவுகளில் கிராம்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. எனினும் எல்லாவிதமான மசாலாக்களுடன் சேர்க்க கூடாதாம்.. கிராம்பு எண்ணெயை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்பார்கள்.. ஆனால், முகப்பருவின் மேல் தடவினால் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு மிகவும் அத்தியாவசியமான பொருளாகும்.. தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. இதனால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கிறது. எனினும், கிராம்பு எடுப்பதற்கு முன்பு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
சுவாச பிரச்சனைகள்: ஆண்டிஆக்சிடெனட் நிறைய உள்ளதால், எந்தவிதமான புற்று நோய்களும் எளிதில் தாக்காது.. நுரையீரலின் நண்பன் இந்த கிராம்பு என்று சொல்லலாம்.. அந்த அளவுக்கு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது.. ஆஸ்துமா பிரச்சனைக்கே, சிகிச்சையளிக்க இந்த கிராம்பு உதவுகிறதாம்.
தூங்க செல்லும்போது, 2 கிராம்பு சாப்பிட்டு சுடுநீர் குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.. இதனால், முகப்பருக்களும் வராமல் தடுக்கப்படும்.. தொண்டை வலியும் சீராகும்.. வைரஸ் தொற்று முதல் சைனஸ் பிரச்சனைவரை நிவாரணம் தரக்கூடியதுதான் இந்த கிராம்பு. வெறுமனே சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம்.. அல்லது காலை நேரத்தில் டீ போட்டு குடிக்கலாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications