சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை
சென்னை: பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு பாலியல் ஹார்மோன் ஆகும். பெண்கள் பூப்பெய்தும்போது, ஏற்படும் மாற்றங்களுக்கு இந்த ஹார்மோன் மிகப்பெரிய காரணமாக உள்ளது..

ஹார்மோன்: இந்த ஹார்மோன் அதிகரித்தாலும் அல்லது குறைந்தாலும், அது பெண்களின் உணர்வுகளை பெரிதும் பாதிக்கிறது. எனவே, பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் சரியான அளவில் இருக்க வேண்டும்.
சரியான மாதவிடாய் ஏற்படவும், இனப்பெருக்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், இந்த ஈஸ்ட்ரோஜன் தேவையாக உள்ளது.. சிலருக்கு இந்த ஈஸ்ட்ரோஜன் மிகவும் குறைவாக இருக்கும். இதற்கு சில வகை உணவுகள் கைகொடுத்து உதவுகின்றன.
சோயாக்கள்: அதில், முக்கியமானது சோயா தயாரிப்புகளாகும்.. காணரம், இந்தவகையான சோயாக்களில் காணப்படும் சேர்மங்கள், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க செய்கிறது.. ஈஸ்ட்ரோஜன் லெவல் குறைவாக இருந்தால், சோயா மில்க், சோயா தயிர், டோஃபு மற்றும் சோயா கோதுமை மாவு போன்ற சோயா தயாரிப்புகளை சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல, எள் விதைகளும், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவுகிறது.. காரணம், இந்த விதைகளில் லிக்னான்ஸ் நிறைந்திருக்கின்றன.. அந்தவகையில், போஸ்ட்மெனோபாஸ் பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க இந்த விதைகள் பேருதவி புரிகின்றன. இதில், கொண்டைக்கடலையையும் சேர்த்து கொள்ளலாம்.. சிவப்பு பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவற்றையும் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
சேனைக்கிழங்கு: கிழங்கு வகைகளில், சேனைக்கிழங்கில் அதாவது கருணைக்கிழங்கில் இந்த ஈஸ்ட்ரோஜன் கிடைக்கிறது.. கிழங்கில் சிறந்தது கருணை என்பார்கள்.. இந்த சேனைக்கிழங்கில் இருந்துதான், மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கிறார்கள்.. வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொண்டு, இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்குமாம்.
எனவே, பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் கட்டாயம் நீங்கும்.. வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது.
மெனோபாஸ்: உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலத்தை தருகிறது. பெண்களின் வெள்ளைப்பாடு தொந்தரவுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்சனையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
அதேசமயம், ஆஸ்துமா நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள், கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அல்லது மருத்துவர்களின் அனுமதியை பெற்றே சாப்பிட வேண்டும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications