வெறும் "காளான்" போதும்.. உடல் எடை சல்லுனு குறையும் பாருங்க.. ஆண்களின் வரப்பிரசாதம் அற்புத காளான்கள்
சென்னை: புரதச்சத்து முதல் மொத்த சத்துக்களும் நிரம்பி காணப்படும் பொருள்தான் காளான்.. இந்த காளானின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எதற்கெல்லாம் உதவுகிறது தெரியுமா?
நிறைய காளான் வகைகள் உள்ளன.. இவைகளில் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் போன்றவைகள் மட்டுமே உணவாக பயன்படுத்துகிறோம்.. நிறைய காளான்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.. சாப்பிடத்தகுந்த காளான்கள் என்றாலும்கூட, நன்றாக சமைத்த பிறகே சாப்பிட வேண்டும்.

காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் காணப்படுகின்றன.. அதாவது, காய்கறிகள், பழங்களைவிட காளானில் நிறைய புரோட்டீன்கள் உள்ளதாம்..
காளான்கள்: பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே இந்த காளான்கள்தான். முக்கியமாக, இதயத்திற்கு நன்மை தரக்கூடியது இந்த காளான்கள்.. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், இதய நோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது.
எலும்புகள் வலுப்படுவதுடன், புதிய எலும்புகளை உருவாக்கவும் காளான் உதவுகிறது.. அடிக்கடி சமையலில் காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் நெருங்காது..
சுத்திகரிப்பு: கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இந்த காளானில் உள்ளதாம்.. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. உடல் எடை குறைப்போருக்கு சிறந்த உணவாக இந்த காளான் உள்ளது.. காரணம், குறைந்த அளவு கலோரிகள், குறைந்த அளவு கொழுப்புகளை கொண்டவை என்பதால், கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது..
உடல் எடை குறைக்க வேண்டுமானால், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும், நார்ச்சத்து நிறைந்த உணவாகவும் எடுத்து கொள்ள சொல்வார்கள். இது அத்தனையும் இந்த காளானில் உள்ளது. லேசான உடற்பயிற்சியுடன், காளானையும் சேர்த்து சாப்பிட்டுவந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரியும் என்கிறார்கள். காளான்களில் சர்க்கரை இல்லை என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் உதவுகிறது.
கொழுப்புகள்: அதுமட்டுமல்லாமல், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதையும் தடுத்து நிறுத்துகிறது. அதுமட்டுமல்ல மலச்சிக்கலையும் இந்த காளான்கள் தீர்க்கின்றன.. இதனால், உடலிலுள்ள கழிகள் நீங்கி, குடல் பாதுகாப்பும் கிடைக்கிறது..
அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இரும்பு சத்து நிறைந்த இந்த காளானை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. இதனால், ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடும் நீங்கிவிடும்.
உயிரணுக்கள்: மூட்டு வாதம் உள்ளவர்களும், அஜீரண கோளாறு உள்ளவர்களும், காளானை தவிர்க்க கூடாது.. அதேபோல, ஆண்களின் உயிரணுக்களை அதிகப்படுத்துவதில் காளானின் பங்கு அதிகம்.. பெண்களின் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளையும் இந்த காளான் தீர்க்கிறது. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களையும் இந்த காளான் சரிப்படுத்துகிறது.
மண்ணில் வளரும் ஒரு பூஞ்சைத் தாவரம் என்பதால், காளானை சுத்தம் செய்யும்போது, சிறிது எலுமிச்சம் சாறும் சேர்த்து கழுவினால் நிறம் மாறாமல் இருக்கும்.. மார்பகப் புற்றுநோயை குணமாக்க இந்த காளான் பயன்படுகிறது.. அதாவது, தினமும் காளான் சூப் குடித்துவந்தால், பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக, சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளார்களாம்.
தவிர்க்கலாம்: பாலூட்டும் பெண்கள், காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். காரணம், காளான்கள், தாய்ப்பாலை வற்றவைத்துவிடுமாம். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படலாம்.. அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம்.. அதேபோல, காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்களும் தவிர்க்கலாம். அதிலும், நிறமற்ற காளான்களையும், வேறுபட்ட நிறம் கொண்ட காளான்களையும் பயன்படுத்தவே கூடாது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications