முருங்கைக்கீரை.. முருங்கை ஒன்று போதும், மொத்த கழிவும் நீங்கும்.. காசினிகீரை கிடைச்சா விடாதீங்க.. செம
சென்னை: உடல் கழிவுகளை வெளியேற்றினாலே, முக்கால்வாசி உடல்நலக்கோளாறுகள் நம்மை அண்டாது.. அந்தவகையில், இதற்கு உதவியாக இருக்கக்கூடிய கீரைகள் ஒருசிலவற்றை பார்ப்போம்.
நாம் உண்ணும் உணவு, குடிக்கும் குடிநீர், சுவாசிக்கும் காற்று இவை அனைத்துமே 100 சதவீதம் தூய்மையானது என்று சொல்லிவிட முடியாது.. ஒருசில நச்சுக்களும், கிருமிகளும் அறியாமலேயே உடலில் கலந்துவிடுகின்றன.

கீரைகள்: அதேசமயம், இவைகளை வெளியேற்றவும், ஆரோக்கியமான உணவும், சுத்தமான குடிநீரும் தேவையாக இருக்கிறது. மஞ்சள், தேன், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சமையலில் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். இதனால், கழிவுகள், நச்சுக்கள் உடலிலிருந்து நீங்குவதுடன், எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.
இதைத்தவிர, நெல்லிக்காய், கடுக்காய், தான்றியக்காய் அடங்கிய திரிபலா சூரணத்தை தவறாமல் எடுத்து கொள்ளலாம். இதனால், உடல் கழிவுகள் நீங்குவதுடன், உடலும் ஆரோக்கியம் பெறும். இவைகளை தவிர, சில வகை கீரைகளும் நச்சுக்களை அகற்றுவதில் முக்கியத்துவத்தை பெறுகின்றன.
முருங்கைக்கீரை: முருங்கைக்கீரையை எடுத்து கொண்டால், சிறுநீரின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.. இதனால் கழிவுகள் வெளியேறும் நரம்பு பலவீனத்தை தடுத்து நிறுத்தும். தோலில் உள்ள அலர்ஜிகளை நீங்கிவிடும்.. முருங்கைக் கீரை உண்பதால் சொறி, சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.
இந்த முருங்கைக்கீரையில் உயிர்ச்சத்துக்களும் புரதப் பொருள்களும் சுண்ணாம்பு, இரும்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன... எனவே, முருங்கை கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால். அப்படி கீரை கிடைக்காதவர்கள், கீரை பவுடரை வாங்கி பயன்படுத்தலாம்.. இந்த பவுடரில் சூப், ஸ்மூத்திகளில் சேர்த்து குடிக்கலாம். ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் மிகுதியாக உள்ளதால், உடலிலுள்ள கிருமிகளையும், நச்சுக்களையும் வெளியே தள்ளுகிறது.
பொன்னாவரை: அடுத்ததாக பொன்னாவரை கீரையையும் சொல்லலாம். உடலிலுள்ள கழிவுகளை நீக்கி, உடலை பொன்னை போல பேணிக்காக்க கூடியது என்பதால், இந்த பெயர் வந்ததாம். உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும், குடல் புழுக்களையும், கெட்ட நீரையும் வெளியேற்றிவிடுவதால், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு பொன்னாவரை, பெரிதும் கைகொடுக்கிறது. வாரம் 2 முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ஊளைச்சதை குறைய துவங்கும்.
மற்ற கீரைகளை போலவே கடைந்து சாப்பிடலாம். ஆனால், 2, 3 முறை மலம் கழிக்க நேரிடும் என்றாலும், உடலிலுள்ள கெட்ட நீர், கழிவுகள் வெளியேறிவிடுமாம். அதேபோல, இந்த கீரையை வாரம் ஒருமுறை மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.. கர்ப்பிணிகள், குடல் புண், குடல் அழற்சி இருப்பவர்கள் இந்த கீரையை தவிர்க்க வேண்டும்.
காசினி கீரை: அடுத்ததாக காசினி கீரைகள் உடல் கழிவுகளை வெளியேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.. உடலிலுள்ள கிருமிகள், நச்சுக்கள் வெளியேற்றி, ரத்தம் புத்துணர்ச்சியை பெறுவதற்கு இந்த கீரைகள் உதவுகின்றன.. கீரைகளில் காசினி கீரையை, பாதாம் பருப்புடன் வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும்..
அதேபோல, வல்லாரை கீரையை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டால், கழிவுகள் அண்டாது.. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் அற்புத சக்தி இந்த வல்லாரை கீரைக்கு உண்டு..
: இந்த கீரையை கடைந்து சாப்பிடலாம் அல்லது துவையல் போல சாப்பிடலாம்.. அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து விழுதாகவே விழுங்கலாம்.. இப்படி செய்வதால், கழிவுகள் நீங்குவதுடன், எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications