அன்னாசி.. தூங்கும்போதே வாய் வறண்டு போகுதா? அடிக்கடி நாக்கு வறட்சிக்கு இதுதான் காரணமாம்.. கவனம் மக்களே
சென்னை: நாக்கு வறட்சி, வாய் வறட்சி என்பது சாதாரண பாதிப்புகள் போல தோன்றினாலும், எளிதில் எதையுமே எடுத்துக் கொள்ளக்கூடாது. அலட்சியப்படுத்தவும் கூடாது.
நாக்கு வறட்சி என்பது நோய் கிடையாது.. அதேபோல, இது தீவிர நோயின் அறிகுறியும் கிடையாது.. இது ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும், உடலுக்கு தேவையான ஒருசில விஷயங்கள் குறித்து, நமக்கு தெரிவிக்கப்படும் சிக்னல் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

நாக்கு வறட்சி: இந்த நாக்கு வறட்சி ஏற்பட சில காரணங்கள் உள்ளன.. குறிப்பாக, உடலில் ஏற்படும் தண்ணீரின் வறட்சியே நாவில் தெரிகிறது.. உடலுக்கு நீர்த்தேவை என்பதுதான் இதன் பிரதான அர்த்தமாக எடுத்து கொள்ளப்படுகிறது.
அவசர வேலைகளில், தண்ணீரை போதுமான அளவுக்கு குடிப்பதை மறந்துவிடுவதால், ஏற்படும் விளைவுதான் இவையெல்லாம்.. எனவே, குறிப்பிட்ட அளவு தண்ணீரை, உடலின் செயல்பாடுகளுக்கு ஈடு செய்ய வேண்டியிருக்கிறது. அதுதான், இப்படி வறட்சி மூலம் தெரியப்படுத்துகிறது.
அதேபோல, நிறைய மருந்துகள் சாப்பிடுவர்களுக்கும் இப்படி நாக்கு வறட்சியாகலாம்.. குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் மருந்துகள்தான், நாக்கு, வாய் உலர்ந்து போக காரணமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. நரம்பு சேதத்தால் உங்கள் உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாட்டில் இழப்பு ஏற்படலாம்...அதுவும் வாய் உலர்தலுக்கு காரணமாக இருக்கலாம்.
புற்றுநோய்: அளவுக்கு அதிகமான சளி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணங்களினால், வாய்வழியே திறந்து மூச்சுவிட நேரிடும்.. இதனாலும், நாக்கு வறட்சி உண்டாகும்.. புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். பதட்டம், மன அழுத்தம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
அளவுக்கு அதிகமாக நாக்கு வறண்டு போய்விட்டால், சரியாக பேச முடியாது.. உணவுகளை மென்று விழுங்க முடியாது.. நாக்கில் வெள்ளை வெள்ளையாக படலம் தோன்றலாம்.. கண்கள் உலர்ந்து போகலாம்..
நிறைய தண்ணீர்: இதற்கெல்லாம் ஒரே தீர்வு, தண்ணீரை அடிக்கடி குடித்து கொண்டே இருப்பதுதான்.. ஐஸ்கட்டிகள் போன்றவற்றை நாக்குகளில் வைத்தாலும், வறட்சி குறையும்.. அல்லது இனிப்பில்லாத சுயிங்கம் போன்றவற்றை வாயில் அடைத்து கொண்டாலும் வறட்சி குறையும்.. ஒரு நாளைக்கு 2 முறையாவது பல் துலக்க வேண்டும்..
ஆல்கஹால், காபி, டீ, ஜூஸ்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்கள், காரம், உப்பு, இனிப்பு நிறைந்த உணவுகளையும் குறைத்து கொள்ளலாம்.. ரொட்டி, பேக்கரி வகைகள் தவிர்க்கலாம். இரவு சாப்பாட்டில் சிறிது பசுநெய் சேர்த்து சாப்பிடலாம்.. அதேபோல வெட்டிவேர் போட்டு ஊற வைத்த மண் பானை தண்ணீரை குடித்துவிட்டு தூங்கினாலும் வாய் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்.. உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ளலாம்.
இஞ்சி துண்டு: அதேபோல, ஒரு சிறிய துண்டு இஞ்சியை, ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, கொதிக்க விட்டு வடிகட்டி கொண்டு, சிறிது தேனையும் சேர்த்து குடிக்கலாம்.. இஞ்சியில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன.. குறிப்பாக, ஜிஞ்சரால் என்றழைக்கப்படும் பயோஆக்ட்டிவ் சேர்மம் உள்ளதால், உமிழ்நீர் உருவாவதை ஊக்குவிக்கப்பதாக இது அறியப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கவும் உதவும்.
அதேபோல, 1 டீஸ்பூன் சீரகம் விதைகளை, வாயில் போட்டு மெல்லலாம்.. இந்த விதைகளில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் வளர்சிதை மாற்றச்சத்துக்கள் உள்ளதால், உமிழ் நீர் உற்பத்தியைத் தூண்டி, வாயை தூய்மையாக வைக்க உதவுகின்றன. அல்லது ஒவ்வொருமுறையும் சாப்பிட்டவுடன், பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு விதைகளை மெல்லலாம்.
நாக்கு வறட்சி: அல்லது அன்னாசி பழத்துண்டை வாயில் போட்டு மெல்லலாம். கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்... ஆயில் புல்லிங் செய்யலாம்.. அடிக்கடி நாக்கு, வாய் வறண்டுபோய்விட்டால், உதட்டால் ஈரம் செய்ய கூடாது.. இதனால், உதட்டு சருமத்தில் வெடிப்பு உண்டாகலாம்.. தொடர்ந்து நா வறட்சி இருந்தால், மருத்துவரை நேரில் சென்று சந்திக்க வேண்டும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications