மூக்கிரட்டை இலை.. கரிசலாங்கண்ணி கீரை போதுமே.. கண்ணின் நலனை காக்கும் "கரிசன ராணிகள்".. சபாஷ்
சென்னை: கண்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு, மூலிகை இலைகளுக்கு இருக்கிறது.. அந்தவகையில், கண்களை பாதுகாக்கக்கூடிய, 4 வகையான இலைகளை பற்றி பார்ப்போம்.
"கீரைகளின் ராணி" என்று கரிசலாங்கண்ணியை சொல்வார்கள்.. ரத்த விருத்திக்காகவும், சளி இருமல் தீரவும், தலைமுடி வளர்ச்சிக்காகவும், இந்த கரிசலாங்கண்ணி கீரை அதிக அளவில் உதவுகிறது.
கண்கள் நலன்: அதேசமயம், கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்கும் இந்த கீரை பயன்படுகிறது.. பெண்கள் பயன்படுத்தும் கண் மை, இந்த கீரையின் சாறிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் கூந்தல் கறுமை நிறத்துடன் செழித்து வளரும்... அத்துடன், கண்களில் உள்ள எரிச்சல், உஷ்ணம் நீங்கிவிடும்..

இந்த கரிசலாங்கண்ணி இலைச்சாறுடன், நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சியும் தலைக்கு பயன்படுத்தலாம். இதனால், உடல் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் குறையும், காதுவலி நீங்கும்.
மூக்கிரட்டை கீரை: அதேபோல, மூக்கிரட்டையை சொல்லலாம்.. இந்த கீரையும் கண்களின் பாதுகாப்பை பெருக்குகிறது.. வெறுமனே இந்த கீரையை அரைத்து, கண்களின் மேல் தடவி வந்தாலே, இமை வீக்கங்கள் குணமாகிவிடுமாம்.. இந்த செடியின் வேர்களை சுத்தப்படுத்தி, காயவைத்து, அரைத்து தூளாக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரை சுடுநீரில் போட்டு குடித்துவந்தாலும், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீரும்.. கண்பார்வையும் கூர்மைப்படும்.அதேபோல, நேத்திரப்பூண்டு இலைகளை சொல்லலாம்.. கண் எரிச்சல், கண்ணில் பூவிழுதல், கண்ணில் சதை வளருதல், ஒற்றை தலைவலி, கண்புரை, கண் நோய் இப்படி கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், இதன் எண்ணெய்யில் 2 சொட்டுகள் விட்டு வந்தாலே போதும்.. கண்கள் நலன் முழுமையாக காக்கப்படும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நேத்திரப் பூண்டு இலைகள் என்றே விற்கப்படுகின்றன..
காய்கறிகள்: வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொண்டால், கண்கள் ஆரோக்கியம் தழைக்கும்.. இதனால், கண்புரை மற்றும் வயது தொடர்பான விழித்திரை சிதைவு அபாயங்களும் குறைகின்றன.. அந்தவகையில், கேரட், ப்ரோக்கோலி, மஞ்சள் காய்கறிகள், பூசணி, முட்டை, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், போன்றவை உதவுகின்றன.. ஆரஞ்சு, திராட்சை, கிவி, மாம்பழம், அன்னாசி, பப்பாளி, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..

முட்டைக்கோஸ் போன்ற இலை கீரைகளை உணவில் தவறாமல் சேர்த்து வர வேண்டும்.. குறிப்பாக கேரட்டை இலைகளுடன் சேர்த்து வாங்க வேண்டும். வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும், மாலைக்கண் நோயை குணமாக்க இந்த கேரட் உதவுகிறது..
கேரட் இலை: கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் A-வை ரோடாப்சின் நிறமியாக மாற்ற உதவுகிறது. இது மாலை நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில், கண் பார்வையை மேம்படுத்த துணை புரிகிறது. கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள், கேரட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications