சர்க்கரை நோயாளி "வெல்லம்" சாப்பிடலாமா? இளநீர் குடிக்கலாமா? கேரட் சாப்பிடலாமா? நோட் பண்ணுங்க முதல்ல
சென்னை: சர்க்கரை நோயாளிகள், வெல்லம் சாப்பிடலாமா? இளநீர் குடிக்கலாமா? சர்க்கரை நோயாளிகள் எந்த தித்திப்புகளையுமே சாப்பிட முடியாதா?
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் இருக்கும்.. இதை சரிக்கட்ட சத்தான உணவுகளை சாப்பிட வேண்டி உள்ளது. ஆனால், எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது..

அந்தவகையில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை தொடவேக்கூடாது என்றால், அதற்கு மாற்றாக வெல்லம் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஆனார்ல, வெல்லமும் இங்கு சிக்கலையே தந்துவிடுகிறது.
சத்துக்கள்: காரணம், வெறும் 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறதாம்.. அதே அளவு சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளன. அதாவது வெறும் 2 கிராம்தான் வித்தியாசம் உள்ளதே தவிர, பெரிய வித்தியாசம் இல்லை.. அதனால்தான், நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க முயற்சிப்போரும் வெல்லத்திலுள்ள கலோரிகளை கணக்கில் கொள்ள வேண்டும்.. 10 கிராம் வெல்லத்தில் 40 கலோரிகள் உள்ளதால், இதை கவனத்தில் கொண்டே டயட்டை கையிலெடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, வெல்லம் உயர்ந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால், இதை சாப்பிட்டதுமே, உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.. இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது கிடையாது என்கிறார்கள்.
நீரிழிவு நோயாளிகள்: வெல்லம் என்றில்லை, எந்த உணவு பொருளை சாப்பிடுவதானாலும், அதற்கு முன்பு நீரிழிவு நோயாளிகள் தங்களது கிளைசெமிக் அளவை அவசியம் பார்த்து கொள்ள வேண்டும்..
அதற்காக எல்லா இனிப்பு சுவைகளும் கெடுதல் என்று அர்த்தமில்லை.. இனிப்பு சுவை கொண்ட கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. அதைவிட ஆச்சரியம், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த கேரட் உதவுகிறதாம்.
வைட்டமின் A நிறைந்த பீட்டா கரோட்டின் இந்த கேரட்டில் உள்ளது. இது குறைந்த கிளைசெமிக் உணவு என்பதுடன், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவாகும்.. அதனால், ரத்த சர்க்கரை அளவில் பெரிய தாக்கத்தை உண்டு செய்யாது என்கிறார்கள்..
இதுபோல இன்னொரு ஆச்சரியத்தை தருவது இளநீர். இயற்கையாக கிடைக்கும் தித்திப்பு பானம் என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தனை சத்துக்களும் இதில் உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, இதற்காகவே ஒரு ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. அதில், சர்க்கரை நோயுள்ளவர்கள், சரியான அளவில் இளநீர் குடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநீர்: உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க செய்வதில் இளநீரின் பங்கு அதிகம்.. சிறுநீரக பிரச்சனை, மங்கலான பார்வை போன்ற கோளாறுகளையும் இந்த இளநீர் தீர்ப்பதாக சொல்கிறார்கள். அந்தவகையில், மருத்துவரின் ஆலோசனையை பெற்று, இளநீரை தினமும் 250 மில்லி குடித்து வந்தாலே உள்ளுறுப்புகளை பாதுகாக்கலாம் என்கிறார்கள்.
அதேபோல, அரிசி சோறு சாப்பிடுவதையும் பலர் தவிர்த்துவிடுவார்கள்.. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கென்றே வரப்பிரசாதமாக உள்ளது மூங்கில் அரிசியாகும். இந்த அரிசியில் காய்கறி சூப் போல செய்து சாப்பிட்டால், உடலுக்கு நன்மைகள் கூடும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications