தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்.. தினமும் 1 போதும்.. வெள்ளைப்பாடு முதல் இதய நோய்வரை போக்கும் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேன் மிகச்சிறந்த அருமருந்து என்பதால்தான், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் இந்த தேனில் ஊறவைத்து சாப்பிடப்படுகிறது. அந்தவகையில், இஞ்சி, நெல்லிக்காய் இவைகளை பற்றி பார்ப்போம்.

இயல்பாகவே இஞ்சில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.. வைட்டமின் C, B1, B2 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் இஞ்சியில் நிறைந்திருக்கின்றன. இதனால், இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு உண்டாவதை தடுக்கும் குணத்தை இஞ்சி பெற்றிருக்கிறது.

Gooseberry Honey Ginger

எனவேதான், தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிட சொல்கிறார்கள். இதனால், கூடுதல் பலன் கிடைக்கிறது.. குறிப்பாக, வயிறு உப்புசம், வயிறு வலி, வயிறு கோளாறு போன்ற வயிறு உபாதைகள் நீங்குகின்றன. தேனில் ஊறவைத்த இஞ்சியில், தினமும் ஒரு துண்டு, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது, தொப்பை மெல்ல கரைய துவங்குமாம்..

புற்றுநோய்: அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதை இஞ்சி தடுக்கின்றன.

ஆஸ்துமா, மூட்டுவலி, சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் அனைவருக்குமே தேனில் ஊற வைத்த இஞ்சி மிகவும் நல்லது. உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை இஞ்சி தடுப்பதுடன், டிஎன்ஏ பாதிப்பையும் தடுத்துநிறுத்தி, முதுமை தோற்றத்தையும் அண்டவிடாமல் செய்கிறது. நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க விரும்புவர்கள் தேனில் ஊற வைத்த ஒரு இஞ்சியை தினமும் சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள்.

நெல்லிக்காய்: இஞ்சியை போலவே நெல்லிக்காயும் நற்பண்புகளை கொண்டது. அதிக அளவிலான வைட்டமின் C, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தவை நெல்லிக்காய்கள். நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் இணைந்துள்ளதால், நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது.

ஆப்பிள்களைவிட சிறந்த பண்புகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்யக்கூடியவை. ரத்தம் சுத்தமாகும்.. ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடியவை.

ஊறவைத்த நெல்லிக்காய்: தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பட்டு வந்தால், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். நெல்லிக்காய் + தேன் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன.

கண் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை மிகவும் நல்லது.. இதனால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போகுதல், போன்றவை நீங்கிவிடும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்களுக்கு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் அற்புதமான மருந்தாகும்.

வெள்ளைப்படுதல்: வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்களும் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்வதுடன், அதிகப்படியான மாதவிலக்கு உள்ளிட்ட கருப்பை சம்பந்தமான பாதிப்புகளும் நீங்கிவிடும்..

நெல்லிக்காயில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல், அஜீரணமும் நீங்கும்.. நெல்லிக்காய், தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை. மேம்படுத்த உதவும். இதனால் தோல் தொந்தரவுகள் நெருங்குவதிலலை.

ஆலோசனை: ஆனால், தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.. அதுமட்டுமல்லாமல் சிலருக்கு நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் அளவாகவும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது பாதுகாப்பானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+