மீன் எடுக்கறீங்களா? அப்ப மீனுடன் "இதை" மட்டும் சேர்க்காதீங்க.. மீனை சாப்பிட்டதுமே பால் குடிக்கலாமா?
சென்னை: மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாமா? மீனும் பாலும் ஒன்றாக சாப்பிடலாமா? யாரெல்லாம் தவிர்க்கலாம்?
பிரியாணியுடன் நாம் சேர்த்து சாப்பிடும் தயிர் பச்சடியே தவறு என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. தயிர் உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், பிரியாணியை போலவே, வேறு சில உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.
வெங்காயம்: காரணம், தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, வெங்காயம் உஷ்ணத்தை தரக்கூடியது.. எப்போதுமே எதிரெதிர் குணங்கள் ஒன்றுசேர்ந்தால், அஜீரணம் உள்ளிட்ட தொந்தரவுகளை தந்துவிடுமாம்.. அசைவத்துடன் வெறும் வெங்காயம் சேர்த்து சாப்பிடலாமே தவிர, தயிருடன் கலந்து சாப்பிடுவதை மட்டும் தவிர்க்க சொல்கிறார்கள்.

அதுபோலவே, தயிருடன், மீன்களை சேர்த்து சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. பொதுவாக, தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு... சத்து அதிகமான மீனுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானத்தை சிக்கலாக்கிவிடுகிறது.. இதனால், சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்.
தயிர் + பால்: இதில் தயிர் மட்டுமல்ல, பாலையும் சேர்த்து கொள்ளலாம்.. மீன் + பாலை ஒன்றாக சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் என்றும் சொல்வார்கள்.. இதுகுறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
லாக்டிக் பொருட்களை பொறுத்தவரை, குளிர்ச்சி தன்மை வாய்ந்தவை.. ஆனால், மீன்களோ, உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தவை.. இரண்டுமே அதிக சத்துக்களை கொண்டிருந்தாலும், இரண்டுமே எதிரெதிர் குணங்களை கொண்டிருக்கின்றன.. அதனால்தான், இவைகளை ஒன்றாக சாப்பிட வேண்டாம் என்கிறது ஆயுர்வேதம்.
அறிவியல்: ஆனால், அறிவியல் வேறு மாதிரியாக சொல்கிறது.. அலர்ஜி ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் பூர்வமாக சான்றுகள் எதுவும் இல்லையாம். அத்துடன், பல நாடுகளில், பால் உணவுகளையும், மீன்களையும் ஒன்றாகவே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.. மேலும், மீன் சமையலில், தயிர் அல்லது பால் ஊற்றியே சமைக்கவும் செய்கிறார்களாம்.
சுருக்கமாக சொல்லப்போனால், மீன் + பால் இரண்டையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்கிறது ஆயுர்வேதம்.. இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டால், தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அடிப்படை ஆதாரங்களும் இல்லை, இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு இவை இரண்டையும் கலந்து உண்பது சரி என்கிறது அறிவியல.
யார் யார் தவிர்க்கலாம்: ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சிலருக்கு மீன் அல்லது பால் சாப்பிட்டால் அலர்ஜி வரலாம். இதுபோன்றவர்கள் இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போதுதான் அதிக ஆபத்து ஏற்படுகிறது..
அதேபோல, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் இந்த உணவுகளை ஒரே நேரத்தில் தவிர்க்க வேண்டும். அதேபோல, மீன்களை சரியாக சமைக்காவிட்டாலும் இதுபோன்ற பாதிப்புகள் வர நேரிடும். அப்படியே இவை இரண்டையும் சேர்ந்து சாப்பிட்டாலும், அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள், மந்த தன்மை ஏற்படுத்துமாம்.












Click it and Unblock the Notifications