குப்பைமேனி.. சரும நலனை தழைக்க வைக்கும் தழை.. குப்பை மேனியின் ஆச்சரிய மகிமை.. வாவ் குப்பைமேனி எண்ணெய்
சென்னை: மேனியை பொன்னை போல் மாற்றும் சக்தி இந்த குப்பைமேனிக்கு உண்டு.. குப்பையில் கிடந்தாலும், மனித குலத்துக்கு பல்வேறு நன்மைகளை கொட்டி கொட்டி தருகிறது இந்த குப்பை மேனி.
குப்பைமேனி இலைகளிலிருந்து சாறு எடுத்து மருந்தாக பயன்படுத்துவார்கள்.. சளியை இளக்கி வெளியேற்றும் குணம் குப்பைமேனிக்கு உண்டு என்பதால், இந்த இலையை பொடி செய்து, ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து கொடுப்பார்கள்.. தலைவலி இருந்தாலும், குப்பைமேனியை அரைத்து சாற்றை மட்டும் எடுத்து நெற்றியில் பற்று போட்டால் தீர்வு கிடைக்கும்.

இலைச்சாறு: குப்பைமேனி இலைச்சாற்றை வெந்நீரில் கலந்து குடிக்கும்போது, மலச்சிக்கல் தீர்வாகிறது.. அன்றைய தினங்களில், பாம்பு கடிக்கு விஷ முறிவாக இந்த குப்பைமேனியைதான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்..
சளி, தொண்டை வலி, தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் போன்ற பிரச்சனைக்கு, குப்பை மேனி சாற்றுடன் சுண்ணாம்பு கலந்து பூசினால் குணமாகும். குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும். சொத்தை பல் அல்லது பல் வலி இருந்தால், இந்த இலைகளை கழுவி, விரல்களாலேயே நசுக்கி, சொத்தை பற்களின் மீது வைத்தால் குறைபாடு நீங்கும்..
சுத்திகரிப்பு: ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய தன்மை இந்த குப்பைமேனிக்கு உண்டு.. குப்பைமேனி இலையுடன் 2 மிளகை சேர்த்து அரைத்து, தினமும் காலை எழுந்ததும் உணவுக்கு முன்பு, சாப்பிட்டு வந்தாலே ரத்தம் சுத்தமாகும். உடல் வலிமை பெற்று சோர்வு நீங்கிவிடும்.

தோல்நோய்கள், நோய்த்தொற்றுகள், காயங்கள் போன்றவற்றுக்கு குப்பை மேனி எண்ணெய் பயன்படுகிறது.. இந்த எண்ணெய்யை எப்படி தயாரிக்க வேண்டும் தெரியுமா? குப்பைமேனி இலைகளை சுத்தம் செய்து, மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, அதன் சாற்றை மட்டும் வடிகட்ட வேண்டும்.
மஞ்சள் துண்டு: ஒரு வாணலில், இந்த சாறு ஊற்றி, அதே அளவுக்கு தேங்காய் எண்ணெய்யும் சமமாய் சேர்த்து, அத்துடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சத்தம் அடங்கும்வரை காய வைக்க வேண்டும்.. சிறிது நேரம் கழித்து, தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும். வாணலில் தேங்கியிருக்கும் எண்ணெய்யை மட்டும் ஆறவைத்து எடுத்து கொண்டால், குப்பைமேனி எண்ணெய் ரெடி.
குப்பைமேனி இலையுடன், கற்றாழையின் உள் இருக்கும் ஜெல் மற்றும் கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றைக் கலந்து, நன்றாக அரைத்து, முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள், பருக்கள், கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் போன்றவை நீங்கிவிடும்.












Click it and Unblock the Notifications