சர்க்கரை நோயாளி "தேன்" சாப்பிடலாமா? வெள்ளை சர்க்கரைக்கு பதிலா கருப்பட்டி ஓகேவா? ஆச்சரிய உண்மைகள்
சென்னை: சர்க்கரை நோயாளிகள் தித்திப்பு சாப்பிடக்கூடாது என்றாலும், தேன் மட்டும் விதிவிலக்கா? என்ற கேள்வி எழுகிறது.. அப்படியானால், நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயாளிகள் இனிப்பு கலந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளக்கூடாது என்பது அடிப்படையான விஷயம்.. காரணம், தித்திப்பு உணவை சாப்பிடுவதால், சர்க்கரை உடம்பில் வேகமாக அதிகரிக்கிறது.. அதனால்தான், கார்போஹைட்ரேட், நிறைவுற்ற கொழுப்பு, இனிப்பு பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்..

வெள்ளை சர்க்கரை: வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, கருப்பட்டி இவைகள் எல்லாம் மாற்றாக உள்ளது என்றாலும், இவைகளிலும் கார்போஹைட்ரேட் நிறையவே காணப்படுகிறது.. இதில் தேன் குறித்து, பெருத்த சந்தேகம் எழ காரணம், சித்த, நாட்டு மருத்துவ முறைகளில் தேன் தவிர்க்க முடியாததாக விளங்குகிறது.
பெரும்பாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேனை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.. காரணம், தேனில் சுக்ரோஸ் நிறைந்திருக்கிறது.. 80% கார்போஹைட்ரேட், 20 % தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.. அதாவது, ஒரு டீஸ்பூன் தேனில் 21 கலோரி ஆற்றல் இருக்கிறது.. ஒரு ஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
இரும்புச்சத்து: இதைத்தவிர கலோரிகள், இரும்புச்சத்து, வைட்டமின்C, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. தேன் தொடர்பாக நிறைய ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த ஆய்வுகளில், இதய ஆரோக்கியத்திற்கு உதவும் பைட்டோகெமிக்கல்களான பிளவனாய்டுகள் தேனில் நிறைந்துள்ளது தெரியவந்துள்ளது..
கணையத்தில் இன்சுலின் அளவை அதிகரிப்பதில் தேன் பயனுள்ளதாக இருப்பதாகவும், குறைந்த அளவில் தேன் சாப்பிடுவது சர்க்கரையை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாம். பதப்படுத்தப்படாத இயற்கை தேன் + க்லோவர் வகை பூக்களில் இருந்து தேனீக்கள் தயாரிக்கும் தேன், சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.
தேனீக்கள்: ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் சிறந்த ஆதாரமாக தேன்விளங்குவதால், நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க தேவையில்லையாம். அதேசமயம், அதிகமாகவும் தேன் சாப்பிடக்கூடாதாம்.. சர்க்கரை அளவுக்கு தேன் ஆபத்து கிடையாது என்பதால், மிக குறைந்த அளவு மட்டுமே எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள்.. ஆனாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சியும் தேவையாக இருக்கிறதாம்.
தேனுக்கு அடுத்தபடியாக சாப்பிடக்கூடிய பொருளாக, கருப்பட்டி உள்ளது என்றாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே, தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ள வேண்டுமாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications