பூசணி விதை.. குட்டி பூசணிக்காய் விதையில் இத்தனையுமா? தலைமுடி வளரணுமா? ஒல்லி ஆகணுமா? அப்ப இதை பாருங்க
சென்னை: ஒரே ஒரு ஸ்பூன் பூசணி விதை தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? யார் யார் பூசணி விதைகளை சாப்பிடலாம் தெரியுமா?
பூசணி விதையை பரங்கி விதை என்றும் சொல்வார்கள். இந்த பூசணி விதைகளை வெயிலில் உலர்த்தி பொடி செய்து எடுத்து வைத்து கொண்டு, பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

புரோட்டீன், அசிட்டிக் ஆசிட், வைட்டமின் B, தையமின், நியாசின், நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இந்த விதைக்குள் நிரம்பியிருக்கின்றன.. தினமும் இந்த விதையை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், ஆயுசு கூடும் என்கிறார்கள்.
நார்ச்சத்து, தாதுக்கள், பாஸ்பரஸ் நிறைந்தத விதைகள், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது..
கீல்வாத பிரச்சனை: வெறும் 100 கிராம் பூசணி விதைகளில், 18 கிராம் நார்ச்சத்து இருப்பதால், ஆரோக்கியமான வழியில் எடை குறைக்க இந்த விதைகள் உதவுகின்றன.. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த விதைகள் பலன்தருகின்றன..
தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிட்டு வருபவர்களுக்கு என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? கெட்ட கொழுப்புகள் கரைவதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் குறைகிறதாம்.. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்துக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.. இதயத்தின் இயக்கம், ரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு இந்த விதைகள் உதவுகின்றன.
பூசணி விதைகள்: விந்தணு எண்ணிக்கையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும், இந்த ஒரு கைப்பிடி பூசணி விதைகள் உதவுகின்றன. அதாவது, உடலில் துத்தநாகம் குறைவாக இருப்பதால்தான், விந்தணு தரம் குறைந்து விடுகிறது.. இந்த பூசணி விதைகளில் துத்தநாகம் அதிகமாகவே உள்ளதால், இதை உட்கொள்ளும்போது, விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம் என்கிறார்கள்.
கால்சியம் நிறைந்த விதைகளால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதி ஏற்படுகின்றன.. சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. குடற்புழுக்களும் நீங்கிவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கல்லீரல் நச்சுக்களும் வெளியேறிவிடும்.
அதேபோல, பெண்களுக்கு இந்த விதைகள் தரும் நன்மைகள் ஏராளம்.. குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க வேண்டுமானால், இந்த ஒரு கைப்பிடி பூசணி விதைகளே போதும் என்கிறார்கள். வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் இதே பூசணி விதைகள் தீர்வாகின்றன.
தலைமுடி உதிர்வு: பெண்களை பாதிக்கக்கக்கூடிய மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதில், இந்த பூசணி விதைகளின் பங்கு அபாரமாக உள்ளதாம்.. இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கல் புற்றுநோயை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்களும், தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்களும் தாராளமாக பூசணி விதைகளை சாப்பிட்டு வரலாம். வைட்டமின் C நிறைந்துள்ளதால் தலைமுடிக்கு ஆரோக்கியத்தையும், உறுதியையும் இந்த விதைகள் தருகின்றன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications