பிரஷர் குக்கர் ஆபத்து.. எல்லா ஊட்டச்சத்துகளையும் அழித்துவிடுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன
சென்னை: இந்த காலத்தில் பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. பிரஷர் குக்கர்கள் சமைப்பதை எளிமையாக்குவது மட்டுமின்றி, அதை விரைவானதாகவும் மாற்றுகிறது. அதேநேரம் இப்போது பலரும் பிரஷர் குக்கர்களில் சமைப்பதால் உணவில் உள்ள சத்துகள் அழிக்கப்படுவதாகச் சொல்லி வருகிறார்கள். இது உண்மை தானா.. எதனால் இதுபோல சத்துகள் அழிகிறது என்பது குறித்து மருத்துவர்களின் விளக்கத்தை நாம் பார்க்கலாம்.
காலையில் அவசர அவசரமாக எழுந்து சமைத்து பிள்ளைகளைப் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு அனுப்பிவிட்டு, ஆபீசுக்கு ஓடுவது என்பது யாராக இருந்தாலும் ஒரு பெரிய பணி தான்.

பிரஷர் குக்கர்
குறுகிய நேரத்தில் சமைக்க நமக்கு மிகப் பெரியளவில் கை கொடுப்பது என்னவோ பிரஷர் குக்கர்கள் தான். இந்த காலத்தில் நீங்கள் பிரஷர் குக்கர் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது என்ற அளவுக்கு அவை சமையலில் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இது நமக்குப் பிடித்த உணவுகளைச் சிறிது நேரத்தில் சமைக்க உதவுகிறது. சமையல் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது நம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியது என்று கூடச் சொல்லலாம்.
அதேநேரம் இப்போது பலரும் பிரஷர் குக்கரில் உணவைச் சமைக்கும் போது அதிலுள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் அழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் சிலர் பிரஷர் குக்கரை முற்றாகத் தவிர்த்துவிடவும் செய்கிறார்கள். இதனால் அவர்கள் சமைக்க அதிக நேரம் ஆகிறது. ஆனால், இது உண்மைதானா.. பிரஷர் குக்கர் சமையல் எல்லா ஊட்டச்சத்துகளையும் அழிக்குமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கிறது.
ஊட்டச்சத்து அழிந்துவிடுமா?
பிரஷர் குக்கரில் சமைத்தால் ஊட்டச்சத்து அழிந்துவிடும் என நாம் பலரும் சொல்லிக் கேட்டிருப்பதால் இதை நம்புவது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், பிரஷர் குக்கர் சமையல் எல்லா ஊட்டச்சத்துக்களையும் அழிப்பதாக இதுவரை எந்தவொரு ஆய்விலும் கூறப்படவில்லை. மேலும், ஃபிட்னஸ் பயிற்சியாளர் ரால்ஸ்டன் டிசோசா என்பவரும் இதையே தான் கூறுகிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பிரஷர் குக்கர்களை முழுமையாக மூடும் வகையில் மூடி இருக்கிறது. இதனால் தண்ணீர் உள்ளே கொதித்து, நீராவியாக மாறும் போதும் அது குக்கரில் இருந்து வெளியேற முடியாது. இது குக்கரில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், அதிக நீர் ஆவியாகாமல் இருக்கும். அதாவது 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையில் இருந்தாலும் நீர் ஆவியாகாது. இதனால் உணவை ஈஸியாக சமைக்க முடிகிறது" என்றார்.
ஊட்டச்சத்துகள் அழியாது
மேலும், நாம் பிரஷர் குக்கரில் சமைத்தாலும் சரி ஓபனாக வைத்துச் சமைத்தாலும் சரி சில ஊட்டச்சத்துக்களை அழிந்து தான் போகும். இருப்பினும், பிரஷர் சமையல் எளிமையானதாகவும் விரைவானதாகவும் இருக்கும் என்பதால் அது உங்கள் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. அதாவது நீங்கள் பிரஷர் குக்கரில் சமைத்தாலும் ஓபனாக சமைத்தாலும் சில ஊட்டச்சத்து அழிந்து தான் போகும். பிரஷர் குக்கரில் சமைக்கும் போது எல்லா ஊட்டச்சத்தும் அழியும் என்பதில் உண்மை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆரோக்கியமில்லாத சமையல்
இது ஒரு பக்கம் இருக்க ஆரோக்கியமான சமையல் முறை ஆரோக்கியமற்ற சமையல் முறை எது என்பது குறித்து நாம் பார்க்கலாம். குறைந்த வெப்பத்தில் எண்ணெய் இல்லாமல் சமைப்பதே ஆரோக்கியமானது. இந்த முறைகளில் சமைத்தால் ஊட்டச்சத்துக்களை நாம் அதிகளவில் இழக்க மாட்டோம். மறுபுறம் அதாவது deep-frying தான் ஆரோக்கியமற்ற சமையல் முறை என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications