அருகம்புல்லின் அருமை.. 1 டம்ளர் அருகம்புல் சாறு குடித்தால் கிட்னி கல் வெளியேறும்.. ஒரே அதிசயம்தான்
சென்னை: தாய்ப்பால் சுரப்பது முதல் வெள்ளைப்படுதல், சர்க்கரைநோய், ரத்த சுத்திகரிப்பு வரை ஏராளமான நன்மைகளை தரக்கூடியது அருகம்புல்.. தினமும் அருகம்புல் சாற்றை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா? வீட்டு மருத்துவத்தில் எப்படி அருகம்புல்லை பயன்படுத்தலாம்? அவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எத்தகைய தன்மையிலும் அருகம்புல் வளரக்கூடியது.. யுனானி மருத்துவத்துக்கும் அருகம்புல்லுக்கு தனி மகத்துவம் உள்ளது.. இந்த புல்லிலுள்ள சத்துக்களை சொல்லி மாளாது..

குறிப்பாக, மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம், வைட்டமின் C, வைட்டமின் A சத்துக்கள் என இன்னும் ஏகப்பட்ட சத்துக்கள் இந்த அருகம்புல்லில் உள்ளன.
அருகம்புல் சாறு தரும் நன்மைகள்
அருகம்புல் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.. இந்த புல் கிடைக்காவிட்டால், அருகம்புல் பொடி என்றே கடைகளில் நாட்டு மருந்து கடைகளில் விற்கிறார்கள்.. இதனை பசும்பால் அல்லது சுடுநீரில் கலந்து குடிக்கலாம். இந்த சாற்றினை சிலர் துளசி இலைகளை சேர்த்து அரைத்துக்கும் குடிப்பார்கள்.. அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும்.. இதனால் உடல் எடை எளிதாக குறையும்.. உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைய துவங்கும்.. ரத்தத்திலுள்ள அழுக்கு நீங்கி, சுத்தமாகும்.. அத்துடன், விஷத்தன்மை ரத்தத்தில் இருந்தாலும் வெளியேறிவிடும்.
ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு
நினைவுத்திறனை பெருக்கி, மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.. சிறுநீர் எரிச்சலை நீக்கி சிறுநீர் பெருக்கம் அதிகமாகும். மூளை பாதிப்பு, தாது விருத்தி, குடைச்சல், வாய்வு, வயிற்று நோய், மூல நோய், ரத்தக்கொதிப்பு, பித்தம், உஷ்ண வியாதிகள், ஆஸ்துமா, கைகால் வலி, சோர்வு என ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும், ஒரே மருந்தாக திகழ்கிறது இந்த அருகம்புல் ஜூஸ்..
சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேற, நரம்பு தளர்ச்சி குணமாக, அருகம்புல் ஜூஸ்தான் உதவுகிறது. தாய்ப்பாலை பெருக்கச்செய்யும் தன்மை இந்த அருகம்புல்லுக்கு உதவுகிறது.. நெஞ்சு சளி இருந்தால், அதனை கரைத்து வெளியேற்றும்..
தினமும் 50 மில்லி அருகம்புல் சாற்றினை காலையில் குடித்து வருபவர்களுக்கு கை, கால் வலிப்பு, ரத்த சோகை, உடல் சோர்வு, அடிக்கடி வரும் மயக்கம் போன்றவைகள் குணமாகும். ரத்த சர்க்கரை அளவு சீராக வேண்டுமானால், அருகம்புல் சாற்றினை தினமும் சுமார் 100 மில்லி காலையில் சாப்பிட்டு வரவேண்டும். இப்படியே 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
தோல், மூலநோய்
அருகம்புல்லை மஞ்சளுடன் அரைத்துப் பூசினால், சொறி, படர்தாமரை போன்ற தோல் நோய்களும் குணமாகும். அதேபோல, கை, கால்களில் எரிச்சல் இருந்தாலும் அதற்கும் இந்த அருகம்புல் பயன்படுகிறது.. அருகம்புல்லை பயன்படுத்தி தயாரிக்கப்படும் துருவாதித் தைலம், இதுபோன்ற சரும எரிச்சல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அருகம்புல் சாறை, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அதிமதுரம் போன்றவற்றுடன் சேர்த்து இரும்புச்சட்டியில் காய்ச்சப்படும் தைலம் இதுவாகும்.
கண்கள் பாதுகாப்பிலும் அருகம்புல்லின் பங்கு உள்ளது.. இதில, அரும்கம்புல் சமூலம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 150 கிராம் போன்றவற்றை இடித்து 2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் காயவைத்து, ஒரு பாட்டில் எடுத்து வைத்து கொள்ளலாம். இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் கண் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
வெள்ளைப்போக்கு தீரும்
வெள்ளைப்போக்கு அதிகம் இருந்தால், அருகம்புல்லே மருந்தாகின்றன.. இந்த புல்லுடன், காக்கணம் வேர், கீழாநெல்லி இலை, கட்டுக்கொடி இலை போன்றவற்றை சமமாக ஒரு பிடி எடுத்து, 7 ஏழு மிளகு சேர்த்து, விழுதாக அரைத்து கொள்ளவேண்டும். இதனை காலை, மாலை என 2 வேளையும் பிரித்து வைத்துக்கொண்டு பசுந்தயிருடன் கலந்து பங்கிட்டு சாப்பிடலாம். இது வெள்ளைப்பாடு பிரச்சனையை தீர்க்கும். ஆனால், 3 நாட்களுக்கு புளி, காரம் இல்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்.
அருகம்புல் வேர் 50 கிராம், சிறுகீரை வேர் 20 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம் இவைகளை இடித்து, 1 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டர் நீராகும்வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதில் 100 மில்லி அளவு பாலும், கற்கண்டும் சேர்த்து காலை, மாலை 2 வேளைகள் 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால், குடல் புண்கள், வாய்ப்புண்கள் ஆறிவிடும்.
மருத்துவர்களின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்
அதேபோல, சரும அலர்ஜி ஏதாவது இருந்தால், அல்லது அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்பட்டுவிட்டால், அருகம்புல், மாதுளை இரண்டையும் கைப்பிடி எடுத்து 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து 4 டம்ளர் தண்ணீர்விட்டு காய்ச்சி ஒரு டம்ளர் அளவுக்கு சுண்ட காய்ச்ச வேண்டும். வெறும் வயிற்றில் இந்த நீரை 10 நாட்கள் குடித்து வந்தால், எப்பேர்ப்பட்ட அலர்ஜியும் ஓடிவிடும்.
எனவே, மருத்துவர்களின் முறையான ஆலோசனையை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். புல், பூண்டுகளிலும் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த அருகம்புல்..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications