வெறும் வயிற்றில் "இதை" குடித்தாலே போதும்.. அற்புதத்தை பார்ப்பீங்க.. நலனை அள்ளி தரும் கருப்பு "விதை"
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், திராட்சை விதைகள்.
உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் நிபுணர் சிவராமன், ஒரு பேட்டியில் சொல்கிறார், காய்கறிகள் பழங்களை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், முக்கியமாக விதையுள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக கருப்பு திராட்சைப்பழ விதைகள் என்கிறார்.

விதைகள்: காரணம், திராட்சைப்பழத்துடன் அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதுதான் நல்லது.. வைட்டமின் E, C, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் போன்றவை இந்த திராட்சையில் உள்ளது. இதில், வைட்டமின் E சத்தைவிட, திராட்சை விதை 50 விழுக்காடு அதிக சக்தி கொண்டதாம்.. வைட்டமின்-C சத்தைவிட 20 மடங்கு சக்தி கொண்டதாம். எந்தவித பக்கவிளைவும் இல்லாத, சத்துநிறைந்தபழம் இந்த திராட்சையாகும்..
இந்த திராட்சை பழத்திலிருந்துதான், ஒயின் தயாரிக்கப்படுகிறது.. இந்த ஒயினை, பிரான்ஸ் நாட்டினர் அதிகம் பயன்படுத்துவதால்தான், அவர்களுக்கு இதய நோய் பிரச்சனை ஏற்படுவது குறைந்துள்ளதாம்.. இதில், ஜப்பான் ஒருபடி மேலேபோய், முழுக்க முழுக்க திராட்சை விதையிலேயே சாறு தயாரித்து, அததனை இயற்கை உணவாக அங்கீகரித்துள்ளது.
மந்த நிலை: சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலை காணப்பட்டால், கருப்பு திராட்சையை விதையுடன் அரைத்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மந்த நிலை நீங்கும்.. நன்றாக பசி எடுக்கும். நினைவாற்றலை வளர்ப்பதால், இந்த திராட்சையை குழந்தைகளுக்கு நிறைய தர வேண்டும்.

உடலிலுள்ள கழிவுகளை அகற்றுவதில், திராட்சை மிக முக்கிய பங்காற்றுகிறது.. புற்றுநோய் செல்களை அழித்து தடுக்கக்கூடியது..
பெண்கள் இந்த பழத்தை சாப்பிட வேண்டும். இதனால் கருப்பை கோளாறுகள் நீங்கும்.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம், கருப்பு திராட்சை சாப்பிட வேண்டும்.. இதனால், ரத்த நாளங்கள் விரிவடைவதுடன், ரத்தசோகையும் தடுக்கப்படும்.. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறையும்.
காயங்கள்: காயங்களையும், ரணங்களையும் ஆற்றும் சக்தி இந்த திராட்சை விதைகளுக்கு உண்டு. குடல் புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றும் சக்தி இந்த திராட்சைக்கு உண்டு.. கண்களுக்கு மிகவும் நல்லது.. கண்ணில் புரை வளருவதை நீக்குகிறது. சிறுநீரக செயல்பாட்டிற்கு பேருதவி புரிகிறது இந்த திராட்சை விதைகள். உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வலி வீக்கம் உள்ளவர்கள், இந்த திராட்சை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications