"இறால்" மிஸ் பண்ணாதீங்க.. இறால் மீனின் ஆச்சரியங்கள்.. ஆனாலும் ஒரு விஷயம் இருக்கே.. "இதை" கவனியுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறால் என்றில்லை.. கடல் மீன்கள் என்றாலே அத்தனையும் சத்துக்கள்தான்.. எனினும், இந்த இறால் சுவையை தருவதால்தான், பெரும்பாலானோரால் விரும்பப்பட்டு வருகிறது.

இறாலில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

health news and Do you know what are the health benefits of prawn

அதிக சத்து: அதுமட்டுமல்லாமல், கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும், இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

உடல் எடை குறைய: இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளன..ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இறாலை தாராளமாக சாப்பிடலாம்.

புரதம், வைட்டமின் டி , கால்சியம், பொட்டாசியம் அதிகம் உள்ளது.. இறாலில், ஒமேகா 3 கொழுப்பமிலம் அதிகம் உள்ளதால், கொலஸ்ட்ராலினால் ரத்த ஓட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும். அதனால் நெஞ்சு வலி மற்றும் வாத நோய் ஏற்படுவது குறையும்.

கண்களுக்கு நல்லது: இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து நம்மை காக்கும்... கண் வலிக்கு நிவாரணம் தரும்.. கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண் பிரச்சனை பாதிப்பு ஏற்படும்.. அவர்களுக்கெல்லாம் நல்ல நிவாரணியாக இந்த இறால் இருக்கும்.

தலைமுடியின் ஆரோக்கியம் சேர்க்கிறது.. தலை கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைமுடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு இறால்கள் நிச்சயம் உதவும். இதிலுள்ள கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவினை தடுக்கும்.. உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.. இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

சருமம் அழகுபெறும்: இறால்களை சாப்பிட்டு வந்தால், சருமம் அழகுபெறும்.. சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் போக்கி, வயதான தோற்றத்திற்கு எதிராக இறால்கள் செயல்படும்...

எப்போது சாப்பிடக்கூடாது: அறிவியல் ஆய்வுகளின்படி பருவமழை காலமானது கடல் உயிரினங்களுக்கான இனப்பெருக்க காலமாகும். அந்த காலக்கட்டத்தில் இவைகளை பிடித்ததால், இந்த குஞ்சுகள் அல்லது முட்டைகள் அனைத்தும் கருவிலேயே இறந்துவிடும். அடுத்த வருடத்தில் கடலில் குறிப்பிட்ட இடத்தில் இந்த உயிரினங்கள் அதிகமாக இல்லாமல் போய்விடும். அதனால், அந்த காலக்கட்டத்தில் இறால் மட்டுமின்றி மற்ற கடல் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.. இதற்காகத்தான், நம்முடைய அரசு, மீன்பிடிதடைக்காலத்தை அமல்படுத்தியும் வருகிறது.

சுத்தம் செய்யும் முறை: எந்த கடல் உணவாக இருந்தாலும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.. கடல் மீன்களால் நிறைய அலர்ஜிகள் ஏற்படுவது, அவைகளை சரியாக சுத்தம் செய்யாததால்தான் என்கிறார்கள். அதிலும் இந்த இறாலில் உள்ள நரம்புகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடும்போது, குடலில் செரிமானம் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் இப்படி பல உடல் நலப்பிரச்சனைகள் வரக்கூடும்..

இறால்களை தண்ணீரை நன்றாக கழுவி எடுத்துக் கொண்டு, கத்தி அல்லது நமது கைகளாலே இறாலின் தலைப்பகுதியை துண்டிக்க வேண்டும். பிறகு வால் பகுதியையும் கையிலேயே பிய்த்து எடுக்க வேண்டும்.

கசப்புத்தன்மை: இப்போது மிகவும் சுலபமாக நடுப்பகுதியில் உள்ள தோலையும் நீக்க முடியும்... பிறகு, இறாலின் மேல்பகுதியில் கருப்பு கலரில் நூல் போல இருக்கும் இறாலின் நரம்புகளை, கவனமாகவும், முழுமையாகவும் பிரித்தெடுக்க வேண்டும். கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தாலும், சமைக்கும்போது கசப்பு தந்துவிடும். நரம்புகளை நீக்கியபிறகு, ஒரு துளி உப்பு, மஞ்சள் சேர்த்து மறுபடியும் நன்றாக கழுவி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. "சுத்தம் சுகம் தரும்" என்பது மட்டுமல்ல, சுத்தம் சுகாதாரத்தையும் தரும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+