ஜஸ்ட் 4 விதை போதும்.. கொலஸ்ட்ராலை காலி செய்யும் "சூரியகாந்தி விதைகள்".. சூப்பர் டயட் டிப்ஸ் இருக்கு
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், சூரியகாந்தி விதைகள்..
சூரியகாந்தி விதைகளிலிருந்து தயாராகிறது, சமையல் எண்ணெய்.. சமையலுக்கு மட்டுமே இந்த சூரியகாந்தி பயன்படுவதில்லை.. மாறாக, இந்த விதையை நன்றாக மென்று சாப்பிடலாம். அருமையான சுவையை கொடுக்கும். சிறிய வெள்ளை விதைகளில் கால்சியம், கலோரிகள் அதிகம்

விதைகள்: இந்த விதையில், நியாசின், வைட்டமின் ஈ அதிகம் இருக்கின்றன.. இந்த நியாசின் சத்தானது, நம்முடைய ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது.. கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளதால், மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்க செய்கிறது.
30 கிராம் வறுத்த சூரியகாந்தி விதையில் 163 கலோரிகளும், 14 கிராம் கொழுப்புகளும், 5.5. கிராம் புரோட்டீனும், 6.5 கிராம் கார்போஹைட்ரேட்டும், 3 கிராம் நார்ச்சத்தும், அடங்கியிருக்கின்றன.
இதயநோய்கள்: இதய நோய்களை தடுத்து நிறுத்துகிறது.. அதனால்தான், சமையல் எண்ணெய்களில் இந்த சூரிய காந்தி எண்ணெய்யை பயன்படுத்த சொல்கிறார்கள்.. உடலிலுள்ள கொலஸ்ட்ராலை இந்த விதைகள் குறைக்கின்றன.. கொழுப்புகளை கரைத்து மெட்டாபாலிசத்தை அதிகரிக்க செய்வதால்தான், இதயத்துக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இதயத்தை காப்பதுடன், ரத்த அழுத்தம், பக்கவாதத்தினால் ஏற்படும் அபாயத்தையும் இந்த விதைகள் குறைக்கின்றன.
மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.,. நினைவாற்றல் பெருகும்.. சருமத்தை அழகாக்குகிறது.. பளபளப்பாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுகிறது.
ஆற்றலை தரக்கூடியது: உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது.. காரணம், இந்த விதைகளில் தயாமின் அதாவது வைட்டமின் பி1 என்ற சத்து உள்ளது. நம்முடைய உடலுக்கு ஆற்றலை தரக்கூடியது இந்த சத்துதான். அத்துடன் ஹார்மோனான, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் போன்றவற்றின் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது. எனவே, பெண்களுக்கு இந்த விதை மிகவும் நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த விதைகள் ஓரளவு பலன்தரத்தக்கது.. இதில், குளோரோஜெனிக் அமிலம் உள்ளன.. அதனால், டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், தினமும் சிறிது சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டாலே, ரத்த சர்க்கரையை 10 சதவீதம் வரை குறைக்கலாம் என்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், தாராளமாக சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.. இதனால், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்..
உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்களும் வெளிிற, வயிறு, குடல் பகுதிகள் சுத்தமாகின்றன. இந்த விதைகளில் பீட்டா- சிட்டோஸ்டெரால் என்று சொல்லக்கூடிய பைட்டோஸ்டெரோல் அடங்கியுள்ளது.. இது கட்டிகள் அல்லது வீக்கங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியது..
எப்படி சாப்பிடலாம்: சூரியகாந்தி எண்ணெய்யை தவிர, இந்த விதைகளை நேரடியாகவே பொரியலில் சேர்த்து சமைக்கலாம்.. அல்லது,
அசைவ சாலட்கள், அல்லது காய்கறி பொரியல்களில் இதனை சேர்த்து கொள்ளலாம்.. பேக்கிங் செய்யும் பொருட்களில்கூட பயன்படுத்தலாம்
அல்லது, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் இந்த சூரிய காந்தி விதையையும் சேர்த்து ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம்.. ஆனால், உப்பு சேர்க்காமல் வறுத்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பு.. ஆனால், இவைகளை சாப்பிட்டபிறகு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டுமாம்.
யாரெல்லாம் தவிர்க்கலாம்: இதில், சோடியம் அதிக அளவில் உள்ளதால், சோடியம் தொடர்பான சிகிச்சையை எடுப்பவர்கள் இதை தவிர்க்கலாம்.. அதேபோல, அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்..
சிலருக்கு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டால் அலர்ஜி வரலாம்.. சிலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம். இவர்கள் இந்த விதையை தவிர்க்கலாம்.. அதேசமயம், ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்துக்கும் பாதிப்பு வரும் என்கிறார்கள். அதனால், மருத்துவர் உதவியுடன் இந்த விதையை சாப்பிட்டால், ஆரோக்கியம் தழைக்கும்.












Click it and Unblock the Notifications