"விளக்கெண்ணெய்".. விலக்கிட முடியாத எண்ணெய்.. அடடே.. டால் அடிக்குதே.. இவ்ளோ நாளும் இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: "விளக்கெண்ணெய்" - எண்ணெய்களிலேயே இந்த விளக்கெண்ணெய் சற்று ஸ்பெஷல் என்கிறார்கள்.. அத்தனையும் நன்மை செய்யக்கூடியது.. மருத்துவ ஆச்சரியங்களை அள்ளி தரக்கூடியது.. நம் பெரியவர்கள், இந்த விளக்கெண்ணையை வீடுகளில் தவறாமல் வைத்திருந்தார்கள்.. அதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே, இந்தியா சீனர்களிடமும், ரோமானியர்களிடமும், கிரேக்கர்களிடமும்கூட விளக்கெண்ணெயின் பயன்பாடு இருந்திருக்கிறதாம்.

தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்கள் அத்தனையும் மருத்துவ சத்துக்கள் நிறைந்தவை என்கிறார்கள்.. அதில் ஒன்றுதான், இந்த விளக்கெண்ணெய்.. ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படுவதால், ஆமணக்கு எண்ணெய் என்றும் சொல்வார்கள்.

health news and Do you know what are the health benefits of castor oil

விதைகள்: இதன் விதைகள் விஷத்தன்மை வாய்ந்தவையாம்.. ஆனால், இதிலிருந்து பெறப்படும் எண்ணெய், நச்சுத்தன்மை இருப்பதில்லை.. மற்ற எண்ணெய்களைவிட, இந்த எண்ணெய் பார்ப்பதற்கு பச்சை கலரிலும், அடர்த்தி நிறைந்தும் காணப்படும். அத்துடன் பிசுபிசுப்பு தன்மைகள் உடையவை.

- மலச்சிக்கல் உடையவர்களுக்கு, விளக்கெண்ணெய் அருமருந்தாகிறது.. மலமிளக்கியை தூண்டும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மலச்சிக்கலுக்கும், குடலை தூய்மைப்படுத்தவும், இந்த விளக்கெண்ணெய்தான் அந்த காலத்தில் இருந்தே பேருதவி புரிந்து வந்துள்ளது.. இதற்காகவே, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மாதம் ஒருநாளாவது விளக்கெண்ணெய் குடிப்பது என்றே ஒரு பழக்கத்தை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

சில சொட்டுக்கள்: வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெந்நீரில் ஒருசில சொட்டுக்களை மட்டுமே விட்டு கலந்து குடிக்க வைத்தால், அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்... அதேபோல, இரவில் வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் தோய்த்து சாப்பிடும் வயிற்றை சுத்தப்படுத்துவதில் நல்ல பலனை தந்து வந்திருக்கிறது.

- விளக்கெண்ணெய் சூட்டை நீக்கி, குளிர்ச்சியை தரக்கூடியது.. அதனால், இரவு நேரத்தில் கண் இமைகளுக்கு விளக்கெண்ணெய்யை தடவி வந்தால் குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டர், லேப்டாப் என்று வேலைபார்ப்போருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கண்இமைகளும் நீளமாக வளரும்.

- ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளதால், தலைமுடி வளர்ச்சிக்கும் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். அதாவது தலைமுடி வெடித்து காணப்படுவர்கள், இந்த விளக்கெண்ணெயை முடியின் முனைகளில் தடவி வரவேண்டும்.. ஒரு மணிநேரம் விளக்கெண்ணெயால் ஊற வைத்தால் போதுமாம்.. அதற்கு மேல் ஊற வைத்தால் குளிர்ச்சி அதிகமாகி சளி, ஜலதோஷம் பிடிக்க நேரிமும் என்கிறார்கள்.

வறண்ட சருமம்: ஆனால், விளக்கெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயும் சேர்த்து தடவினால் பாதிப்பு இருக்காது.. கூடுதல் பலன் கிடைக்கும். வறண்ட தலைமுடிக்கு மட்டுமல்ல, வறண்ட சருமத்துக்கும் இந்த விளக்கெண்ணெய் உதவுகிறது.

பெரியவர்களுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கும் இந்த விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்.. இரவில், ஒருசில துளி விளக்கெண்ணெயை லேசாக சூடுபடுத்தி, மூட்டு இருக்கும் பகுதிகளில் மசாஜ் போல தேய்த்து வந்தாலும், சரும துவாரங்களின் வழியாக எண்ணெய் உள்ளே சென்று, மூட்டுகளின் உராய்வை தடுத்து நிறுத்துகிறது.. அத்துடன் மூட்டு வலியையும் குறைக்கிறது... ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்லப்படும், தீவிர மூட்டுவலிக்கும் விளக்கெண்ணெய்யே சிறந்த மருந்தாகும்.

குழந்தைகள்: குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ, அல்லது அடிக்கடி வாய்ப்புண்கள் ஏற்பட்டாலோ, அந்த குழந்தைகளுக்கு விளக்கெண்ணெயில் செய்த மருந்துகளைத்தான் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.. ஆனாலும், சித்த டாக்டர்களின் அறிவுரையை பெறாமல் நாம் அவற்றை பயன்படுத்தக்கூடாது..

டாக்டர்கள் அட்வைஸ்: பொதுவான தகவல்களின் அடிப்படையில், எத்தனையோ மருத்துவ குறிப்புகள் இணையத்தில் சொல்லப்பட்டாலும், அவைகளை எல்லாம், மருத்துவ ஆலோசனையைப் பெற்றே, கடைப்பிடிக்க வேண்டும் என்பதே உண்மை. அதேசமயம், உணவுகளில் சில சந்தேகங்கள் எழுந்தாலும், அதையும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டி உள்ளது. அந்தவகையில், விளக்கெண்ணெய் குறித்தும், டாக்டர்களை அணுகி, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டால் நமக்கு நல்லது.

அலர்ஜி: ஆனால், சிலருக்கு இந்த எண்ணெய்யின் வாடை அலர்ஜியை தந்துவிடும்.. இந்த அலர்ஜிக்கு தலையில் உள்ள பேன்கள்கூட, அலறியடித்து கொண்டு ஓடிவிடுமாம்.. அதனால்தான், பேன் இருப்பவர்கள் மற்றும் உடல்சூடு காரணமாக தலையில் "பொங்கி" இருந்தால், இந்த நல்லெண்ணெய் வைத்து, சிறிது நேரம் ஊறவைத்து, குளித்து வந்தால் சரியாகும்.

அரை வாளி குளிர்ந்த நீரில், ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு கைப்பிடி எப்சம் உப்பு, பத்து மில்லி விளக்கெண்ணெய் விட்டு, பக்கெட் நீரில் பாதங்களை கால் மணி நேரம் ஊறவைத்தால், விளக்கெண்ணெய் நக இடுக்கில் சென்று, பாதத்துக்கு குளிர்ச்சி தரும்.. பாத எரிச்சல் நீங்கும்.

இவ்வளவு அருமருந்தாக பயன்படும் இந்த விளக்கெண்ணெய்யை, ஒருவரை மட்டமாக குறைத்து பேசுவதற்கு பயன்படுத்துவது எவ்வளவு தவறானது?? எப்படி பார்த்தாலும், யாருமே விலக்கி வைக்கக்கூடாத எண்ணெய்தான் இந்த "விளக்கெண்ணெய்".

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+