"எப்புட்றா இது".. ஒரே இரவில் நிஷாகந்தி இலை தரும் ஆச்சரியம்.. ஆண்மை குறை நீக்கும் "குலேபகாவலி" அதிசயம்
கோவை : கோவை குறிச்சி பகுதியில் ஆச்சரியம் நடந்துள்ளது.. அங்கே நிஷாகந்தி பூ பூத்திருக்கிறதாம்.. இதை எல்லாரும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள்.. இந்த பூ எப்படி இருக்கும்? இதன் தன்மை எத்தகையது? மருத்துவ குணங்கள் உள்ளனவா?
இன்று பலரது வீடுகளில் நிறைய வாஸ்து செடிகள் வளர்க்கிறார்கள்.. அதில், பிரபலமான வாஸ்துசெடிதான், பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி என்று என்ற பூ.. இதற்கு இன்னொரு பெயர் "குலேபகாவலி" என்பார்கள்.
கள்ளிச்செடிகள்: இந்த பூக்கள் கள்ளிச்செடி வகையை சேர்ந்தவை.. இந்த செடிகளின் தண்டுகளே இலைகள் போல இருக்கும்.. தடிமனாக காணப்படும்.. அவ்வளவும் நீர்த்தன்மை வாய்ந்தது.. இந்த தண்டுகளின் முடிச்சுகளிலிருந்துதான், புதிய செடிகள் வளர ஆரம்பிக்கின்றன.. ஆனால், மற்ற பூக்களை போல வேகமாக வளராது.. மொட்டுகள் தோன்றி மலராக மலர்வதற்கு பல நாட்கள் ஆகுமாம்.

பூ மலர கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆகிறது. இவ்வளவு நாட்கள் கழித்து மலர்ந்தாலும், ஒரே இரவில் அது உதிர்ந்துவிடும்.. அதற்கு ஆயுளே ஒரு இரவுதான்.. அதாவது, இரவு நேரத்தில் மலர்ந்து, நள்ளிரவில் முழுமையாக பூத்து, விடியலில் உதிர்ந்துவிடுமாம்..
அதனால்தான், "இரவு ராணி" என்று இந்த பூவை சொல்வார்கள். பார்ப்பதற்கு வெண்மையாக இருக்கும்.. நிறைய வாசனைகளை தரும்.. அதைவிட முக்கியம், இந்த பூ மிகவும் அரிதானது.. வருடத்தில் ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே பூக்கும்.. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டுமே பூக்கும்.. அதனால், அரிய வகை பூவில் இந்த நிஷாகந்தியும் அடக்கம்.. காஸ்ட்லியான பூ என்றும் இதை சொல்லலாம்.
பலன்கள்: இந்த பூக்கள் அழகை மட்டும் தருவதில்லை. வேறு சில பாசிட்டிவ் எனர்ஜியை தருகிறது என்பதால்தான், வீடுகளில் வாஸ்து பூவாக வளர்க்கப்பட்டு வருகிறது.. சிவபெருமானுக்கு மிகுந்த விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்று அழைக்கப்படுவது இந்த நிஷாகந்தி பூக்களைதான். . விஷ்ணு படுக்கையில் இருப்பது போல் தோற்றம் இருப்பதால் இது ஆனந்த சயனபூ என்று அழைக்கப்படுகிறது. தெய்வீக மலராகவே கருதப்படுவதால் இதை பெரும்பாலானோர் பறிக்க மாட்டார்கள்
இந்த பூ பூக்கும் தருணங்களில், நாம் ஏதாவது வேண்டிக்கொண்டால் அது நடக்கும் என்று நம்பப்படுகிறது.. அதிர்ஷ்டமான பூ என்றும் கருதப்படுகிறது.. சீனர்களின் அதிர்ஷ்ட பூவாக இது கருப்படுவதால்தான், பெரும்பாலான சீனர்களின் வீடுகளிலும் இதனை வளர்த்து வருகிறார்கள்.
அதிர்ஷ்டம்: நாம் நினைத்ததை இந்த பூ நிறைவேற்றி காட்டுவதாக சிலர் அழுத்தமாக நம்புகிறார்கள்.. இந்த நிஷாகந்தி பூவை வைத்து, ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு கதைகள் புனையப்பட்டுள்ளன.. நிஷாகந்தியை, அதிர்ஷ்டம், வெற்றி, அமைதி, காதல் என்று அனைத்து விஷயங்களுடனும் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டதால், இப்போதுவரை இந்த நம்பிக்கைகள் பெரும்பாலானோரிடம் தொடரவே செய்கிறது.
நம்ம தமிழ்நாட்டில்கூட இதுக்கு ஒரு கதை உண்டு.. அதாவது சங்க காலத்தில், ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தாராம்.. அப்போது, கந்தர்வ அழகிகள், அவரது தவத்தை கலைக்க முயன்றார்களாம்.. உடனே முனிவருக்கு கோபம் வந்துடுச்சாம்.. அதனால், அந்த அழகிகளை பார்த்து, "நீங்கள் எல்லாரும் நிஷாகந்தி பூவாக மாறி, யாருமே பார்க்க முடியாத அளவுக்கு, நைட் நேரத்தில் பூத்து, பூத்து விடிகாலையிலேயே வாடிவிட வேண்டும் என்று சாபம் தந்ததாக கதைகள் உண்டு.
மருத்துவ குணங்கள்: அழகு, அதிர்ஷ்டம் என்பதையெல்லாம் தாண், இந்த பூக்கள் மருத்துவ குணங்களை உடையது.. குறிப்பாக, கண்பார்வைக்கு நிறைய உதவுகிறதாம்.. இயற்கை மருத்துத்தில் இந்த பூவுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறதாம். அதேபோல, ஆயுர்வேத மருத்துவத்திலும், இந்த பூவின் இலைகளை வைத்து, தீக்காயங்களுக்கும், தோலில் ஏற்படும் மற்ற காயங்களுக்கும் சிகிச்சை தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றுவலிக்கும், சிறுநீர்த்தொற்றுக்கு நிவாரணமாக திகழ்வது இந்த நிஷாகந்தி பூக்கள்.. இதைவைத்து வியட்நாமில் சூப் செய்வார்கள்.. இது ஆண்மை விருத்தியை பெருக்குவதாக சொல்கிறார்கள்..
ஆச்சரியம்: மன அழுத்தத்தை தீர்க்கக்கூடிய சிறந்த நிவாரணி இந்த பூக்கள்.. இப்போது சீசன் என்பதால், இந்த பூ கோவை குறிச்சி பகுதியில் பூத்துள்ளது.. ஸ்ரீதர் என்பவரின் வீட்டில் இரவு நிஷாகந்தி பூ பூத்திருக்கிறது.. ஆனால், அதிகாலையிலேயே வாடியும் விட்டதாம்..
இதுகுறித்து குறித்து ஸ்ரீதரின் குடும்பத்தினர் சொல்லும்போது, "கடந்த வருடம் பெரியநாயக்கன்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு நர்சரியில் இந்த செடியை வாங்கினோம்.
சாயங்காலம் 7 மணிக்கு நிஷாகந்தி பூ பூக்க துவங்கியது.. நல்ல மணம் வீசியது.. வெள்ளை கலரில் பூ காணப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் பூ முழுவதுமாக மலர்ந்தது.. உடனே நாங்கள் விளக்கேற்றி பூஜைகள் செய்து மகிழ்ந்தோம். பூ அதிகாலை 4 மணியளவில் வாடியது. இருந்தாலும், எங்கள் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாருமே இந்த பூவை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து சென்றார்கள்" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications