கீரைகள் உடலுக்கு நல்லவைதான்.. ஆனால் இரவு நேரத்தில் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: உடலுக்கு நல்லதே என்றாலும் ஒரு சில உணவுகளை இரவு நேரத்தில் உண்ணக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். அதிலும் கீரையை இரவில் உண்ணவே கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.
ஒவ்வொரு உணவுக்கும் ஜீரணமாகும் நேரம் மாறுபடும். கஞ்சி, ஆவியில் வேக வைத்தவை எல்லாம் எளிதில் ஜீரணமாகிவிடும். அது போல் இறைச்சி உள்ளிட்டவை ஜீரணமாவதில் நேரம் எடுக்கும்.
சில உணவுகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் எதை எதை எப்போது சாப்பிட வேண்டுமோ அப்போது சாப்பிட்டால்தான் உடலில் எந்த பிரச்சினையும் வராது. இல்லாவிட்டால் நிறைய பாதிப்புகள் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக நீர் காய்கறிகளை இரவு நேரத்தில் எடுப்பதை காட்டிலும் பகல் நேரத்தில் எடுப்பதே சிறந்தது. காரணம் நீர் காய்கறிகளை இரவில் சாப்பிட்டுவிட்டு படுத்தால் அவர்களுக்கு தலைவலி, சீதளம், ஜலதோஷம் உள்ளிட்டவை ஏற்படும். எல்லாருக்கும் எல்லா அறிகுறியும் இருக்காது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் இது போன்று ஏற்படும்.
கீரைகள் உடலுக்கு நல்லது, அதில் நார்சத்துகள் அதிகம் உள்ளன. கண் பார்வைக்கும் நல்லது என்பார்கள். இதனால் தினசரி கீரையை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இரவு நேரத்தில் கீரை சாப்பிடலாமா என்றால் அதற்கு பெரியவர்கள் வேண்டாம் என்பார்கள்.
இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒரு வித மந்த நிலையை உருவாக்கிவிடும். இந்த கீரைகளால் அதிக கலோரிகள் கிடைக்கின்றன. இதனால் ஜீரணத்தில் சிக்கல் ஏற்படும்.

சிலருக்கு ஜீரணமாகாமல் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் காலையில் செய்த கீரையை பிரிட்ஜில் எடுத்து வைத்தும் சிலர் சாப்பிடுவார்கள். இதுவும் தவறு. மேலும் இரவு நேரத்தில் கீரையில் பூச்சிகள் ஏதாவது விழுந்துவிட்டாலும் தெரியாது என்பதால் 6 மணிக்கு மேல் கீரை சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
அது போல் அசைவ உணவுகளை இரவு 7 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடவேண்டும். தாமதமாக சாப்பிட்டால் அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். இரவு நேரங்களில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும் என மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications