இந்த ஒரே "இலையே" போதும்.. மின்னல் ஸ்பீடில் உடல் எடை குறையுமாமே.. அட, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், உடற்பயிற்சியும் + சரியான உணவும் + முறையான தூக்கமும் அவசியமும் என்றாலும், உடல் எடையை குறைக்க சிலவகை இலைகளும் உதவுகின்றன. அதில் ஒன்றுதான் பார்ஸ்லி எனப்படும் மல்லி இலை. இதை பார்ஸ்லே அல்லது பார்செலி என்றெல்லாம்கூட அழைப்பார்கள்.
பார்ப்பதற்கு கொத்தமல்லி போலவே இருக்கும் இந்த பார்ஸ்லி.. அதனால்தான் மல்லி இல்லை என்று இதனை நிறைய பேர் சொல்வார்கள்.. கொத்தமல்லியில் உள்ள சத்துக்களை போலவே, இந்த கீரையிலும் இருக்கும். கிட்டத்தட்ட சோம்புவின் ருசி, வாசனை போலவே இருக்கும்.. அதனால்தான், சாலட், சூப்களின் மீது இந்த பார்ஸ்லியை தூவுவார்கள்...

பார்ஸ்லியின் இலை, விதை, வேர் என்று அனைத்துமே உணவுக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் நிறைய உள்ள இந்த பார்ஸ்லி, புற்றுநோய் செல்களின் அபாயத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடியது.. வைட்டமின்கள் நிறைந்துள்ள இந்த பார்ஸெலி, எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமையை தரக்கூடியது..
ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பவர்களுக்கு அருமருந்தாகும் இந்த கீரை.. ரத்த சோகை குணமாக இந்த கீரை மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்களில் இந்த பார்ஸ்லி கிடைக்கும் என்பதால், அடிக்கடி பயன்படுத்தலாம். உடலின் உள்ளுறுப்புக்களை சுத்தம் செய்யக்கூடியது இந்த பார்ஸ்லி.
அதேபோல மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும், பார்ஸ்லி கீரையை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.. காரணம், ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதில் பார்ஸி பெரும்பங்கு வகிக்கிறது.. செரிமானத்தை சீராக்கி, சிறுநீர் உற்பத்தியையும் பெருக்குகிறது. நச்சுக்களையும் சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.
சரும பிரச்சனை: சருமத்தில் ஏற்படும் வயது முதிர்ச்சியை தடுத்து நிறுத்தி, சரும அணுக்கள் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. அதனால்தான், முகக்கிரீம்கள் தயாரிப்பில் இந்த பார்ஸ்லியை பயன்படுத்துகிறார்கள்.
பார்ஸ்லியிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை கிராம்பு எண்ணெய் என்பார்கள்.. பற்களுக்கான சிகிச்சையில் இந்த கிராம்பு எண்ணெய்யை டாக்டர்கள் பயன்படுத்துவார்கள்.. ஆன்டிபயாடிக் பண்பு இந்த எண்ணெய்யில் நிறைய உள்ளதால், வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. அதனால்தான், டூத் பேஸ்ட் தயாரிப்பில் இதை பயன்படுத்துகிறார்கள்.
பார்ஸ்லி : இந்த கீரை வகையில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். பார்ஸ்லி சாப்பிட்டு வந்தால் கண் மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளை உறுதிபடுத்த கூடியது. கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பார்ஸ்லிக்கு தனி இடம் உண்டு.. இந்த பார்ஸெலி, விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைதான், காஸ்மெடிக்ஸ் எனப்படும் அழகு சாதன பொருட்களில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.. அத்துடன், சோப்பு, ஷாம்பு, சென்ட், இப்படி அனைத்து வகையான தயாரிப்புகளிலும் இந்த பார்ஸ்லி பயன்படுகிறது.

அழகு பொருட்கள்: இது அனைத்தையும்விட முக்கியமாக, உடல் எடை குறைப்பதில் பார்ஸ்லியின் பங்கு அபரிமிதமானது.. காரணம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை பார்ஸ்லி கரைத்துவிடும்.. உடலுக்கு தேவையான சத்துக்களையும் தரக்கூடியது.. குடல் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக விளங்கக்கூடியது.. அதனால் நச்சுப்பொருட்களும் வெளியேற்றிவிடும். சிலர் இந்த மல்லி கீரையை வைத்து டீ போட்டு குடிப்பார்கள்.. சிலர், ஜூஸ் தயாரித்து குடிப்பார்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பார்ஸ்லியை கலந்து இறக்கிவிட வேண்டும்.. 20 நிமிடம் ஊற வைத்த பிறகு அதை வடிகட்டி குடித்தால் உடல் எடை குறையும். அல்லது, தினமும் பார்ஸ்லி கலந்த நீரை, நாள் முழுவதும் ஒரு லிட்டர் அளவுக்கு குடிக்கலாம்.. 1 லிட்டருக்கு மேல் குடிக்கக்கூடாதாம்.
அளவு முக்கியம்: அதேபோல ஜூஸ் செய்வார்கள்.. ஒரு கைப்பிடி பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி, தண்ணீர், எலுமிச்சம் சாறு கலந்து மிக்ஸியில் அரைத்து, பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதுவும் இடைவிடாமல் 5 நாட்கள் குடித்தால் ஓரளவு பலன் தரும்.. பிறகு 10 நாட்கள் மறுபடியும் இடைவெளி விட்டு, இந்த ஜூஸ் சாப்பிடலாம். அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இந்த பார்ஸ்லிக்கும் பொருத்தம் என்பதால், குறைவான அளவே எடுத்து கொள்ளலாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications