சிவந்து சிவந்து போகும் கண்கள்.. சென்னை மக்களே உஷார்.. இதுதான் பிரச்சனையே.. பறந்துவந்த அட்வைஸ்..!!
சென்னை: கோடைகாலம் என்பதால், சென்னையில் சமீபநாட்களாவே, கண் அழற்சி நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.. இதற்கான பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.
கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.. தற்போது, தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது.. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக, அதிக வெயில் காரணமாக, கண்கள் பல வகைகளில் பாதிக்கப்படும்.. அதனால், மற்ற காலங்களைவிட கோடைக்காலத்தில்தான் கண்மீதான பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.
கண் உலர்தல்: கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது கண்கள் உலர்ந்துபோதல் (Dry Eyes). இதனால் கருவிழி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது.. கண் ஈரப்பதத்துடன் இருந்தால்தான் பார்வைத் திறன் நன்றாக இருக்கும்... வெயில் காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கருவிழியின் நடுவிலுள்ள லிக்யூட் லேயர் ஆவியாகி கண் உலர்ந்துபோய்விடும்.. இதனால் கருவிழி பாதிப்படையும். இதுபோன்ற நேரங்களில் சிகிச்சை அவசியமாகும்... ஆனால், கண்கள் உலர்ந்துபோவதை தடுக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அதைவிட அவசியமானது.
பாக்டீரியாவால் வரும் பிரச்சனையான மெட்ராஸ் ஐ எனப்படும் கண் வலியும் மக்களை தாக்கக்கூடும்.. இதைச் சரிசெய்ய, கண்களில் ஆன்டிபயாடிக் டிராப்ஸ் விடலாம். பொதுவாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே கண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். ஆல்கஹால் சொல்யூஷனை பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்கள் சிவந்து: அதேபோல, வெயில் காலங்களில் கண் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு கண்களில் அரிப்பு ஏற்படும்.. கண்கள் சிவந்து காணப்படுவதுடன் நீர் அதிகமாக வடியும்.. இமைகளில் வீக்கமும் காணப்படும்.. இப்படி ஒவ்வாமை ஏற்படும்போது, குளிர்ந்த நீரில் ஒத்தடம் தருவது நல்லது. அடிக்கடி கண்களைக் கசக்காமல் இருக்க வேண்டும். சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையிலிருந்து விடுபடலாம். கண்களில் கண்ணீர் சுரக்காதபோது, உலர்ந்த கண்கள் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தண்ணீர் அல்லது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.
எனினும் தற்போது, கண் அழற்சி பாதிப்புகள் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, சென்னையில் இந்த பாதிப்பு பெருகி கொண்டிருக்கிறது.. இந்நிலையில், கோடை வெயிலால் கண் அழற்சி நோய் அதிகரித்து வருகிறது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்..
கண் அழற்சி: அதில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தில், உலர்ந்தகண்கள், கண் அழற்சி, புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு, ஒவ்வாமையால் ஏற்படும் கண் அழற்சி மற்றும் கண் காயங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. அதன்படி, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு, ஒவ்வாமைகள் மற்றும் காயங்களிலிருந்து, கண்களை பாதுகாப்பது அவசியம். கண்களில் கண்ணீர் சுரக்காதபோது, உலர்ந்த கண்கள் பிரச்சினை ஏற்படுகிறது.. எனவே, கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, தண்ணீர் அல்லது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.
கடந்த இரண்டு வாரங்களாக, இளம் சிவப்பு கண் நோய் என்ற கண் அழற்சி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அடிக்கடி கை கழுவ வேண்டும்: கண் தொற்றுகள் வராமல் தடுக்க உங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களை அணிபவராக நீங்கள் இருப்பின், லென்ஸ்களை கண்ணில் பொருத்துவதற்கும் அல்லது அகற்றுவதற்கும் முன்னதாக உங்களது கைகளை கழுவுவது உட்பட முறையான தூய்மைநடைமுறைகளை கடைபிடிக்கவும்.
கண்கள் ஈரப்பதம்: கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதுடன், சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாத்துகொள்ள சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்ல வேண்டும். நீர்ச்சத்து குறையாதவாறு பானங்களை அருந்த வேண்டும். அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது" என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications