கொளுத்தும் வெயில்.. கோடைக்காலங்களில் இந்த பழங்களை சாப்பிடக்கூடாதா?.. டாக்டர்கள் சொல்வது என்ன
சென்னை: பொதுவாக கோடைக்காலங்கள் என்றாலே, வெயில் உடலில் உள்ள நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க அதிக அளவில் பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறிவருகின்றனர். ஆனால், வெயில் காலத்தில் சாப்பிடக்கூடாத பழங்கள் என சில இருக்கிறது.
பழங்கள் இந்த உலகத்தின் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய உணவு. பழங்களில் பல வகைகள் இருக்கிறது. எல்லா பழங்களையும் எல்லேரும் எல்லா நேரங்களிலும் சாப்பிட்டுவிட முடியாது. சிறுவர்களுக்கு வேண்டுமானால் இது பொருந்தாமல் இருக்கலாம். ஆனால், நடுத்தர வயது இருப்பவர்கள், இணை நோய் கொண்டவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் எந்த நேரத்தில் எந்த பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிற விஷயத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் சிறந்ததாக இருக்கும். ஆனால் அவர்களிடம் சீதாப்பழத்தை கொடுத்தால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்க இந்த பழம் வழி வகுத்துவிடும். எனவே பழங்கள் குறித்த தெளிவான புரிதல் அவசியமாகும். கோடைக்காலங்களில் பொதுவாக தர்பூசணி, முலாம் பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம், எலுமிச்சை பழம் ஆகியவற்றை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்
தர்பூசணி பழத்தை பொறுத்த அளவில் நமது உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. எளிதாக கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் இதை தாராளமாகவே எடுத்துக்கொள்ளலாம். அதேபோல இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும், நமது சருமத்திற்கு தேவையான வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவையும் இப்பழக்கத்திலிருந்து நாம் பெற முடியும்.
அதே முலாம் பழத்திலும் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. இதிலும் தர்பூசணியை போல நீர்ச்சத்துக்கள் நிரம்பி இருப்பதால் வெயில் காலங்களில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. அதேபோல இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் கண்களுக்கு அதிகம் பலன் தருகிறது. இந்த பழத்தை சாப்பிடும்போது உடனடியாக உடல் புத்துணர்ச்சியை பெறுகிறது. சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளையும் இந்த பழம் தீர்க்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

இந்த பழங்களின் வரிசையில் சாத்துக்குடிக்கு முக்கியமான இடம் இருக்கிறது. இப்பழம் கோடைக்காலத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் கூட அனைத்து காலங்களுக்கும் ஏற்ற பழங்களாக இது இருக்கிறது. இதில் இருக்கும் அபரிமிதமான வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகிறது. இது தவிர பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மினரல்கள் இருப்பதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் பொதுவாக எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கோடையில் சில பழங்களை சாப்பிடக்கூடாது என்று பொதுவாக சில கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. உண்மையில் கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள் என ஏதாவது இருக்கிறாதா? என்று கேட்டால், அப்படியெல்லாம் ஏதும் இல்லையென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டிரை ஃப்ரூட்ஸ் என்று சொல்லப்படும் உலர் பழங்களான, பேரீட்சை பழம், உலர் திராட்சை போன்ற பழங்களை சம்மர் காலத்தில் தவிர்க்க வேண்டும் என பலர் சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. உலர் பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை கெடுக்கிறது. எனவே, இந்த பழங்களை கோடைக்காலத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே கோடைக்காலங்களில் தவிர்க்க வேண்டிய பழங்கள் என எதுவும் கிடையாது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications