மினு மினு சருமத்துக்கு முளைக்கீரை.. ரத்தவிருத்தி, சருமம், தோல் ஆரோக்கியத்துக்கு சத்தான தண்டுக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: குளிர்ச்சி நிறைந்த முளைக்கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சரும நோய்களுக்கு முளைக்கீரையை எப்படி பயன்படுத்தலாம்? ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முளைக்கீரையை சாப்பிடலாமா? சுருக்கமாக பார்க்கலாம்.

முளைக்கீரையை தண்டுக்கீரை என்றும் சொல்வார்கள். ஏனென்றால், இந்த கீரையின் தண்டுகளிலும் அளவிட முடியாத சத்துக்கள் இருக்கிறதாம். எனவே, எப்போது முளைக்கீரை வாங்கினாலும், அதன் தண்டுகளையும் சிறுசிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு சமைக்க வேண்டும்.

mulai keerai thandu keerai skin



தண்டுக்கீரை:
அல்லது வெறுமனே தண்டுகளை சுத்தம் செய்து, துண்டாக்கி, அதை வேகவைத்து அந்த நீரில் சூப் அல்லது ரசம் வைக்கலாம். இந்த தண்டுக்கீரையின் நீரை குடிக்கும்போது, உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

முளைக்கீரையில் இல்லாத சத்துக்களே இல்லை.. ஏகப்பட்ட வைட்டமின்கள், தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, 85.7 சதவீதம் நீர்ச்சத்துக்கள், இரும்புச்சத்து , தாமிரச்சத்துக்கள், மணிச்சத்துக்கள் என அத்தனையும் நிறைந்துள்ளன.

சுண்ணாம்புச்சத்து: அதிலும், சுண்ணாம்புச்சத்துகள் அதிகமாக உள்ளன. 85.7 சதவீதம் நீர்ச்சத்தும் உள்ளது.. தாமிரச் சத்துக்களும், மணிச்சத்துக்களும் முளைக்கீரையில் நிறைய உள்ளன.. அனைத்தையும்விட முளைக்கீரையில் இரும்புச்சத்துக்களின் சங்கமம் என்று சொல்லலாம். முளைக்கீரையை கடைந்து அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு ஹீமோகுளோபின் பிரச்சனை ஏற்படுவதில்லை. முளைக்கீரையிலுள்ள சத்துக்கள், நம்முடைய மூளையின் திறனை வலுப்படுத்த உதவுகிறது..

நாக்கில் ருசி இல்லாதது போல் தோன்றினாலோ அல்லது சரியாக பசி எடுக்காமல் போனாலோ அல்லது அஜீரணம், உப்புசம் போன்று இருந்தாலோ, இந்த முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வரும்போது, நன்றாக பசி எடுக்கும்.. நாக்கில் ருசிப்புத்தன்மையையும் கூட்டும்.

சருமத்தில் மினுமினுப்பு: சருமத்தில் மினுமினுப்பு தேவை என்றால், முளைக்கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிடலாம். அல்லது முளைக்கீரை சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தாலும் முகம் பளபளப்பாகி, மென்மையாகும். சொறி, சிரங்கும் நெருங்குவதில்லை.

முளைக்கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வருவதால், உடலுக்கு வலு கிடைக்கும்.. பசி உணர்வு அதிகமாகும்.. உடல் சூடு, ரத்தக்கொதிப்பு இருந்தால், முளைக்கீரையுடன் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சாப்பிடலாம். இதனால், பித்த எரிச்சலும் நீங்கும்.. கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.

பித்தம்: பித்தம் அதிகமாக இருந்தால், அல்லது ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால், முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, பவுடர் செய்து சாப்பிடலாம். குளிர்ச்சி மிகுந்த முளைக்கீரை மூல நோய்களுக்கும் மருந்தாகின்றன. இந்த முளைக்கீரையுடன் துத்திக்கீரையையும் சம அளவு எடுத்து சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும். அத்துடன் நரம்புத்தளர்ச்சியும் நீங்கி, நரம்புகளுக்கு பலம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+