முருங்கைக்காய்.. முந்தி நோயை தீர்க்கும் முருங்கை.. சர்க்கரை நோயாளி, கர்ப்பிணி முருங்கையை சாப்பிடலாமா
சென்னை: முருங்கைக்காய் தரக்கூடிய மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா? அதிகமாக முருங்கைக்காய் சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?
முருங்கைக்காயை பொறுத்தவரை, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்துள்ள அற்புதமான உணவாகும்.. எலும்புகள், பற்கள் உறுதி பெற உதவுகிறது இந்த முருங்கைகாய்.

முருங்கைக்காய்: பிஞ்சுக்காய், முற்றிய காய், நடுத்தர காய் என்ற 3 வகையான முருங்கைக்காய் இருந்தாலும், நடுத்தரமான முருங்கைகாயில்தான் அதிகமான சத்துக்கள் உள்ளதாம்.. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் சிறந்த தீர்வை தரும்.
ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்கும் சக்தி இந்த முருங்கைக்கு உண்டு.. காரணம், இந்த இதிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் சர்க்கரை நோயாளிக்குக்கு நன்மை பயக்கிறது.. ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது.
கண்பார்வை: தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகளை முருங்கைக்காய் சீர்செய்கிறது.. கல்லீரல், மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு வரப்பிரசாதம்.
தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கைக்காய் நல்லது. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் தரக்கூடியது..
புற்றுநோய் செல்: அதுமட்டுமல்ல, அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு முருங்கைக்காய்தான் நல்மருந்து என்கிறார்கள். எனவே, வாரத்தில் 2 முறையாவது முருங்கைக்காய் சாப்பிடவேண்டும்.. இதன் விதைகளுடன் சாப்பிடும்போது, மலக்குடல்களில் இருக்கும் பூச்சிகளும், கிருமிகளும் வெளியேறும்.. முக்கியமாக, நியாமிஸின் என்ற இதிலுள்ள பொருள், உடலில் புற்றுநோய் செல்கள் வளருவதை தடுக்கிறது
முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற குறைபாடுகள் நீங்குகிறதாம். ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுவதுடன், பெண்களுக்கு கருமுட்டை வலுப்பெற இந்த காய் உதவு செய்வதால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று மருந்தாக சாப்பிட வேண்டும்.
நார்ச்சத்துக்கள்: எவ்வளவுதான் நன்மையை தந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.. காரணம், இந்த முருங்கையிலும் அதிக நார்ச்சத்து உள்ளன.. அதிக நார்ச்சத்துக்களும் உடலுக்கு அபாயம்தான்.. அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைகள் உண்டாகலாம். இந்த முருங்கையிலுள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை தரலாம்.
முருங்கைக்காய் ரத்த அழுத்த குறைபாடுகளுக்கு உதவும் என்றாலும், அதிக அளவு ரத்த அழுத்தத்தை குறைத்துவிடும். இதன்காரணமாக, மயக்கம், தலைசுற்றல், குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்..
கர்ப்பிணிகள்: அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு அலர்ஜியை தந்துவிடும் என்பதால் டாக்டர் அனுமதி இல்லாமல் சாப்பிடக்கூடாது. அதுமட்டுமல்ல, முற்றிய முருங்கை முருங்கையை சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications