For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரித்திரம் படைத்தது தேசம்- 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்- பிரதமர் மோடி ஆற்றிய முழு உரை

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் வளர்ச்சியடைந்த பெரிய நாடுகளில் கூட தடுப்பூசிப் பற்றியத் தயக்கம் தற்போது பெரும் சவாலாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதை முன்னிட்டு இன்று நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஆற்றிய உரை: 100 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தி கடினமான ஆனால் குறிப்பிடத்தக்க சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. 130 கோடி இந்திய மக்களின் அர்ப்பணிப்பால் நிகழ்த்தப்பட்ட சாதனை இது. இந்த வெற்றி இந்தியாவின் வெற்றி மற்றும் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வெற்றி.

Indias Covid19 Vaccine Prog. Science-born, Science-driven and Science-based, says PM Modi

100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, நாட்டின் வலிமையின் பிரதிபலிப்பு, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் படைக்கப்பட்டுள்ளது. இது சிக்கலான இலக்குகளை நிர்ணயித்து அதனை எவ்வாறு அடைவது என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு விளக்கம்.

தற்போது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை உலகின் பிற நாடுகளுடன் ஏராளமானோர் ஒப்பிடுகின்றனர். 100 கோடியைக் கடந்த இந்தியாவின் வேகமும் பாராட்டப்படுகிறது. எனினும் இது பற்றி ஆராயும் போது இந்தியாவின் தொடக்கத்தை அடிக்கடி மறந்து விடுகின்றனர். தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் பல தசாப்தங்களாக வளர்ந்த நாடுகள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருந்தன. இந்த நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகளைத்தான் இந்தியா பெரும்பாலும் சார்ந்திருந்தது. இந்த காரணத்தாலேயே நாட்டில் மிகப் பெரிய பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதும், உலகளாவிய இந்தப் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் திறமை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

வெளிநாடுகளிலிருந்து அதிக அளவிலான தடுப்பூசிகளை வாங்குவதற்கு தேவையான நிதியை இந்தியா எங்கிருந்து பெறும்? இந்தியாவிற்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்? இந்திய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா? இல்லையா? தொற்றுப் பரவலைத் தடுக்க பெருமளவிலான மக்களுக்கு இந்தியாவால் தடுப்பூசி செலுத்த முடியுமா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலாக 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இந்தியா, தனது மக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகளை மட்டும் செலுத்தவில்லை. மாறாக அதனை இலவசமாகவே நிறைவேற்றி முடித்தது. உலகின் மருந்துப் பொருள் மையமாக இந்தியா ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இது மேலும் வலுப்படுத்தப்படும்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் தொடக்க காலத்தில், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவது மிகவும் சிக்கலாக இருக்கும் என மக்கள் கவலையடைந்திருந்தனர். பெரிய அளவில் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை இங்கு நிலைநாட்ட முடியுமா? என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. நம்மைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பதற்கு அனைவரையும் ஓரணியில் கொண்டு செல்வது என்பதுதான் பொருள். 'இலவச தடுப்பூசி மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி' என்ற பிரச்சார இயக்கத்தை நாடு தொடங்கியது. ஏழை-பணக்காரர், கிராமப்புற மற்றும் நகர்ப்புறவாசி என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நோய் பாகுபாடு காட்டாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதில் எந்த பாகுபாடும் இருக்காது என்பதே நாட்டின் ஒரே மந்திரமாக இருந்தது. எனவேதான் தடுப்பூசி திட்டத்தில் முக்கியப் பிரமுகர் கலாச்சாரம் இடம் பெறாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களுக்கு செல்வார்களா? என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. உலகில் உள்ள வளர்ச்சியடைந்த பெரிய நாடுகளில் கூட தடுப்பூசிப் பற்றியத் தயக்கம் தற்போது பெரும் சவாலாக உள்ளது. ஆனால் இந்திய மக்கள், 100 கோடி தடுப்பூசி செலுத்தி இதற்கு பதில் அளித்துள்ளனர். 'அனைவரின் முயற்சி' என்ற பிரச்சாரத்துடன் அனைவரின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்தால் அதன் விளைவு மிக சிறந்ததாக இருக்கும். பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு என்ற பாதுகாப்பை அரசு முன்வரிசையில் நிறுத்தியது.

இந்தியாவின் ஒட்டு மொத்த தடுப்பூசி திட்டமும் அறிவியல் கருவில் பிறந்து, அறிவியல் களத்தில் வளர்ந்து, அறிவியல் நடைமுறைகள் வாயிலாக 4 திசைகளையும் சென்றடைந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசித் திட்டமும் அறிவியலில் பிறந்து, அறிவியலால் வளர்க்கப்பட்டு, அறிவியல் சார்ந்ததாக இருப்பது நம் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கக் கூடியது. தடுப்பூசித் தயாரிக்கப்படுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்தப்படும் வரையிலும், ஒட்டுமொத்த இயக்கமும் அறிவியல் அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்பட்டது. உற்பத்தியை அதிகரிப்பதுதான் சவாலாக இருந்தது. அதன் பிறகு பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசியை அனுப்புவதும் சவாலாக இருந்தது. ஆனால் அறிவியல்பூர்வமான நடைமுறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக இந்த சவால்களுக்கு நாடு தீர்வை கண்டது. ஆதார வளங்களும், அசாதாரண வேகத்தில் அதிகரிக்கப்பட்டது. கோவின் இணையதளம், இந்தியாவில் உற்பத்தி போன்றவை சாமானிய மக்களுக்கு வசதியாக இருந்தது மட்டுமின்றி நமது மருத்துவப் பணியாளர்களின் வேலையையும் எளிதாக்கியது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிபுணர்கள் மற்றும் பல நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஆக்கப்பூர்வக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். தற்போது இந்திய நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகள் வருவது மட்டுமின்றி இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் அதிக அளவுக்கு மேற்கொள்ளப்படும் முதலீடு மூலம் ஏராளமான தனிநபர்களை வளர்ச்சியடைந்தவர்களாக மாற்றியுள்ளது. வீட்டுவசதித் துறையிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள், இந்தியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய செய்யும். பெருந்தொற்று காலத்தில் வேளாண் துறை நமது பொருளாதாரத்தை வலுவானதாக வைத்திருந்தது. தற்போது உணவு தானியங்களை அரசு இதுவரை இல்லாத அளவுக்கு கொள்முதல் செய்து வருகிறது. இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

மக்கள் எந்தவொரு சிறியப் பொருளை வாங்கினால் கூட அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? இந்தியரின் கடின உழைப்பால் தயாரிக்கப்பட்டதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும். இது அனைவரின் முயற்சியால்தான் சாத்தியமாகும். தூய்மை இந்தியா இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டதைப் போல, அதே வழியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களால் தயாரிக்கப்பட்டப் பொருட்களை வாங்க உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவளிப்பதை ஒரு நடைமுறையாகப் பின்பற்ற வேண்டும்.

பெரிய இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது, அதனை எவ்வாறு அடைவது என்பதை நாடு அறியும். ஆனால் இதற்கு, நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உரை எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பது பிரச்சனையல்ல, கவசம் எந்த அளவு நவீனமாக இருக்கிறது என்பதும் பிரச்சனையல்ல, கவசங்கள் முழுமையானப் பாதுகாப்பை உறுதி செய்தால், சண்டை நடக்கும் போது ஆயுதங்கள் வெளியே வராது. எனவே கவனக்குறைவாக இருக்க வேண்டாம். நமது பண்டிகைகளை அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் கொண்டாடுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
PM Modi said that The entire Covid19 vaccination program of India has been Science-born, Science-driven and Science-based.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X