சூர்யா ஸ்டைலில்... ‘சிக்ஸ்பேக்’கில் கலக்கும் 74 வயது அமெரிக்க தாத்தா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இளசுகளுக்குத் தான் இந்த சிக்ஸ்பேக் மோகம் என்றால், அமெரிக்காவில் ஒரு 74 வயது தாத்தா சிக்ஸ்பேக் வைத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதிகமான பீர் சாப்பிட்டதால், உடல் ஆரோக்கியம் கெட்டு வாழ்வா, சாவா எனப்போராடிய இந்தத்தாத்தா, அதிரடியாக இன்று சிக்ஸ்பேக் சகிதம் வலம் வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா..?

‘இப்டி இருந்த நான், இப்டி ஆயிட்டேன்' ரேஞ்சுக்கு மாறிய அவரது வாழ்க்கை ரத்தினச் சுருக்கமாக உங்களுக்காக....

‘பீர்’லாம் மோர் மாதிரி.....

‘பீர்’லாம் மோர் மாதிரி.....

அமெரிக்கா, லாஸ் வேகாஸ்சைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெஃப்ரி லைஃப். தற்போது 74 வயதாகும் இவருக்கு சிறுவயது முதல் பீர் எல்லாம் மோர் மாதிரியாம்.

57ல் முதுமை....

57ல் முதுமை....

மூன்று வேளையும் பீரை உள்ளே தள்ளியதன் விளைவாக, உடம்பில் எல்லா நோய்களும் வந்து ஒட்டிக் கொள்ள தனது 57 வயதிலேயே, 97 வயது தாத்தா போல தோற்றம் மாறியதாம் இவருக்கு.

டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்....

டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோன்....

நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து போனதால், தனது மற்றொரு மருத்துவ நண்பரின் உதவியை நாடி இருக்கிறார் ஜெஃப்ரி. இது டெஸ்ட்டோஸ்டீரான் என்ற ஆண்களுக்கான பிரத்யேக ஹார்மோன் குறைபாட்டின் விளைவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்கொலைக்குச் சமம்....

தற்கொலைக்குச் சமம்....

டெஸ்ட்டோஸ்டீரான் ஹார்மோனை செயற்கையாக உடலில் ஏற்றுவது இந்த தள்ளாத வயதில் தற்கொலைக்குச் சமம் என்பதால் தயங்கியிருக்கிறார் ஜெஃப்ரியின் நண்பர். ஆனால், வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்த ஜெஃப்ரி, துணிந்து ஊசியைப் போட்டுக் கொண்டாராம்.

12 வாரங்களில் சிக்ஸ்பேக்....

12 வாரங்களில் சிக்ஸ்பேக்....

ஹார்மோன் செயற்கையாக ஏற்றப்பட்டதன் விளைவாக தற்போது கிட்டத்தட்ட 20 வயது இளைஞனாகவே மாறிவிட்டார் ஜெஃப்ரி. மிகக் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் 12 வாரங்களிலேயே சிக்ஸ்பேக் அழகன் ஆகியுள்ளார் ஜெஃப்ரி.

வாழ்க்கை வாழத்தானே...

வாழ்க்கை வாழத்தானே...

இது குறித்து ஜெஃப்ரி கூறுகையில், ‘ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே இல்லை. கூடவே, சக்சஸ்புல்லாக என் செக்ஸ் வாழ்க்கையை நான் என்ஜாய் செய்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

வாட் அ மேன்.....

வாட் அ மேன்.....

கட்டுடலுடன் வலம் வரும் இவரது புகைப்படங்கள் பல இதழ்களின் அட்டைகளை அலங்கரிக்கிறது. 20 வயதில் தொப்பையுடன் இருக்கும் பல ஆண்கள், இவரது சிக்ஸ்பேக் உடலைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+