கை நிறைய சம்பளம்..! சிவப்பு கம்பளம் விரித்து அழைக்கும் எய்ம்ஸ்! உடனே விண்ணப்பிக்கவும்..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : எய்ம்ஸ் என அழைக்கபடும் போபாலில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை உலகத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு சாமானியனும், பெரும் பணக்காரர்களும் சிகிச்சை பெறக்கூடிய வகையில் இலவச சிகிச்சையும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

AIIMS bhopal has announced the recruitment of 37 vacancies

இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு பணிபுரிய செல்லக்கூடாது. டெல்லி, போபால் உள்ள இந்தியாவின் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ்ல் தற்போது காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : பதிவாளர்
காலி பணியிடத்தின் எண்ணிக்கை : 01

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : இரத்த மாற்று அலுவலர் (Blood Transfusion Officer)

காலி பணியிடத்தின் எண்ணிக்கை: 01

வயதுவரம்பு: 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் எம்டி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : மருத்துவ இயற்பியலாளர் (Medical Physicist)

காலி பணியிடத்தின் எண்ணிக்கை : 01

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று ரேடியோலாஜிக்கல் மெடிக்கல் பிசிக்ஸ் -இல் முதுநிலைப் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர் : கணக்கு அதிகாரி (Accounts Officer)

காலி பணியிடத்தின் எண்ணிக்கை : 01

வயதுவரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வணிகவியல் பாடத்தில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : ஆசிரியர்/மருத்துவ பயிற்றுவிப்பாளர்(நர்சிங்) - Tutor/Clinical Instructor(Nursing)

காலி பணியிடத்தின் எண்ணிக்கை: 33

வயதுவரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கற்றல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விபரம் : மாதம் 15,600 முதல் 39,100 வரை வழங்கப்படும்

பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தின்கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+