ரெடியா? நேவி சில்ட்ரன்ஸ் பள்ளியில் ஏராளமான வேலை..டிகிரி, பிஎட் படித்தவர்களுக்கு அரக்கோணத்திலேயே பணி
சென்னை: சென்னை அரக்கோணத்தில் நேவி சில்ட்ரன்ஸ் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள், லேப் அசிஸ்டென்ட், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இதற்கு பிஎட் முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பம் செய்து பணியை பெற முடியும்.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் அரக்கோணத்தில் நேவி சில்ட்ரன்ஸ் ஸ்கூல் (Navy Children School or NCS) செயல்பட்டு வருகிறது. இதில் அரக்கோணத்தில் உள்ள பள்ளியில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். இதுதொடர்பான அறிவிப்பின் முக்கிய சாராம்சங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
அரக்கோணம் நேவி சில்ட்ரன்ஸ் ஸ்கூலில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி ஆசிரியர், ஆய்வுக்கூட நிபுணர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பம் செய்து தேர்வாகும் நபர்களுக்கு திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு என்ன?
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்ககல்வி ஆசிரியர்கள் 23 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். லேப் அசிஸ்டென்ட் மற்றும் ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 21 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி என்ன?
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டமேற்படிப்பு முடித்து பிஎட் முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பிஏ, பிஎஸ்சி டிகிரியை தொடர்புடைய துறையில் முடித்து பிஎட் முடித்திருக்க வேண்டும். தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிடெக், பிபிஏ படிப்புகளுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். லேப் அசிஸ்டென்ட் பணிக்கு பிஎஸ்சி டிகிரியையும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரியையும் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.ncsarakkonam.edu.in/ என்ற இணையத்தளம் சென்றுவிண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமும், இ-மெயில் மூலமாகவும் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை The Headmistress, Navy Children School, INS Rajali, Arakkonam - 631 006, தொலைபேசி எண் : 9061752717 / 9488758004 முகவரிக்கும், இ-மெயிலை [email protected] முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜனவரி 23ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications