தட்டி தூக்கலாம்.. 10 முடித்தாலே போதும்.. மாத ஊதியம் ரூ.63,000..ராணுவ ஆர்டினன்ஸ் கார்ப்ஸில் நல்ல பணி
ராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ராணுவ ஆர்டினன்ஸ் கார்ப்ஸ் செக்சனில் 2 பிரிவுகளில் மொத்தம் 1,793 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவாக ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள 1,793 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதம் ரூ.18 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற முடியும்.
இந்திய ராணுவத்தின் ஒருபகுதியாக ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் ( Army Ordance Corps or AOC) உள்ளது. இந்த அமைப்பானது ராணுவத்துக்கு தேவையான தளவாட பொருட்களை வழங்கும் மிகப்பெரிய பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் பல்வேறு முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
ஆர்மி ஆர்டினன்ஸ் கார்ப்ஸில் தற்போது மொத்தம் 1,793 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகள் Tradesman Mate மற்றும் Fireman என 2 பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Tradesman Mate பணிக்கு 1,249 பேர், Fireman பணிக்கு 544 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமின்றி எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம்.

கல்வி தகுதி-வயது வரம்பு என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர்களின் குறைந்த பட்சம் வயது என்பது 18 ஆகவும், அதிகபட்ச வயது என்பது 25 ஆகவும் இருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தப்பட்சமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை வழங்கப்படும். அதன்படி Tradesman பணிக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையும், Fireman பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Army Ordnance Corpsன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aocrecruitment.gov.in சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 18 ம் தேதி கடைசி நாளாகும். இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications